பெயர் : ஜெயந்தி. G.D.
முதலிடம்
தலைப்பு: என் பார்வையில் எதிர்கால இந்தியா
முன்னேற்ற பாதையில்…
முன்னோக்கி பாயையில்…
இன்னல்கள் ஓராயிரம்…
பின்னோக்கி ஈர்க்குமே!
தாய்மண்ணை காக்கவே…
தரணியை எதிர்த்திடலாம்…
போராட நீ இருக்கும் வரை…
வீழாது நம் தேசமே!!
துணிந்து வா இளைஞனே
வெற்றி நடை நாம் போடலாம்!!
கொரோனா பிடியில்…
சுருண்டன வல்லரசுகள்…
மரண ஓலம்…
எங்கும் ஒலிக்கையில்…
தாயெனது தேசமோ…
தன்னிறைவு பெற்றாள்!
விரைந்து செயல்பட்டு
இன்னுயிர் காத்தாள்!
தன் கேடையத்தை
தானே வடிவமைத்தாள்!
“கோவீஷீல்டு, கோவாக்சின்”
என நற்பெயரும் சூட்டினாள்!
பிச்சை பாத்திரம் ஏந்தாமல்…
தன்னை தானே காத்தாள்!
மேற்கத்திய மோகத்தில்…
தாய்நாடு துறந்தவரையும்…
இரு கை கூப்பி வரவேற்று…
பாதுகாப்பு தந்தாள்!
முன்களப் பணியாளர்களை
மலர் தூவி வாழ்த்தினாள்!!
உலகச்சந்தையில் விலைமகளாய்
நிற்காதவள் என் பாரத மாதா!
முதுகில் குத்தும் துரோகிகளோ
எல்லையிலே அத்துமீற…
முன் நிற்கும் எதிரிகளோ
புல்வாமாவில் தாக்குதல் நடத்த…
வெகுண்டெழுந்த தாயவளோ
உக்கிரதாண்டவம் ஆடினாள்!
பதுங்கியுள்ளன குள்ளநரிகள்…
பாயும் நேரம் பார்த்து!
முப்படையும் சிங்கமென…
வேட்டையாடவே காத்து நிற்கும்!!
உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம்
மின்சாரம், போக்குவரத்து, பங்குச்சந்தை, போர்க்கப்பல், போர்விமானம், ஏவுகனைகள், விண்வெளி ஆராய்ச்சி, கல்வி, மருத்துவம், விளையாட்டு
அறிவியல், தொழில்துறை என
பற்பல துறையில் முன்னேற்றம்!
வேளாண்மை, நதி, நீர்நிலைகள், சுகாதாரம், எரிபொருள், பொருளாதாரம், இயர்கைவளம்,விலைவாசி என சில துறைகளில் தடுமாற்றம்!
பசுமை, வெண்மை,நீலமென
மீண்டும் செய்வோம் புரட்சி பல!!
கடந்த காலம் கற்பித்த பாடம்
நிகழ் காலம் வகுத்த பாதை
கொண்டு செதுக்குவோம் எதிர்காலத்தை!!
கை கோர்ப்போம் இளைஞனே…
வழிகாட்ட நல்லிதயங்கள் நிற்கையில்…
கூகிள் மேப்பில் நீ தேடுவது எதை?
கைப்பேசி சிறையில் நீ
சிக்குண்டு தவிக்காதே!
டிக்டாக் மாயையில் நீ
உன் கனவுகளை புதைக்காதே!
யூடியூப்பில் நீ
உன் காலத்தை கடத்தாதே!
ஃபேஸ் புக்கில் நீ
உன் முகவரியை தொலைக்காதே!
வாட்ஸ் ஏப்பில் நீ
உன் வாழ்க்கையை தேடாதே!
டிவிட்டரில் நீ
உன் கடமையை மறக்காதே!
இன்ஸ்டாகிராமில் நீ
உன் இதயத்தை இழக்காதே!
பப் ஜீயில் நீ
உன் வீரத்தை விரயமாக்காதே!
சற்றே நிமிர்
உன் முதுகெலும்பு வலுவுரவே!
சுற்றிப் பார்
எட்டுத்திக்கும் இனி வசமாகும்!
புழுதியிலே நம் நாடென்னும் வீணை நலங்கெடல் நியாயமோ?
நீ மீட்டி அதன் இராகத்தை
சுவைத்திடல் வேண்டாமோ?
ஜன நாயக தேசமோ
ஜன நாயகன் உனக்காக!!
எழுச்சியுற்று எழுந்து வா
விண்ணுலகும் நம் காலடியில்!!
@Sowbarnika Pratibha @Kamu pillai Sis
0 Comments