அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

பெயர்: ஜெயந்தி.G.D.
தலைப்பு: அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

ஆசிரியர் = ஆசு + இரியர்
ஆசு = தவறு, குற்றம்
இரியர் = திருத்துபவர்

என் குற்றங்களை களைந்து எனை நெறிப்படுத்திய நல் உள்ளங்களுக்கு சமர்ப்பணம்….

குருகுலம் முதல்
கூகிள் கிளாஸ் ரூம் வரை
பயிலும் தளங்கள் மாறலாம்
பயிற்றுவிப்பவர் தன்மை மாறுமோ?
அர்ஜுனன், கர்ணன், ஏகலைவன் அன்று!
சிந்து, நீரஜ், சுந்தர்பிச்சை இன்று!!
மாணவர்கள் இங்கே
ஆசிரியர்கள் எங்கே?
திரை மறைவில் என்றும் நீங்கள்…
மேதைகளை மெருகேற்றும் ஏணிப்படிகள்!

உங்கள் அன்பும் அறிவுரையும் சீர்படுத்த…
கண்டிப்பும் தண்டிப்பும் பண்படுத்த
பட்டை தீட்டிய வைரமாய் மின்னினோம்!
வளம் மிக்க நல்லாசிரியர் நீங்கள்தாம்
தரம் மிக்க சமுதாயத்திற்கு வித்திட்டவர்!
கற்றுண்ட மமதையிலே சிக்குண்டோம் பிரபஞ்சம் என்னும் பேராசானிடம்!!
நூல்கள் பல கற்றும் வாழ்க்கை பரிக்கையில் தேர்ச்சி பெற போராட்டம்!
நீங்கள் பயிற்றுவித்த ஊக்கமும் உறுதியும் உடனிருந்து வழிகாட்ட…
நிதம் நிதம் தேடி தேடி 
புதுப்பித்துக் கொள்ளும் ஆர்வத்தால்
பயில்கிறோம் வாழ்க்கைப் பாடத்தை!
கற்பித்தலும் ஓயாது…
கற்றலும் தீராது…
உயிர்காற்றுள்ள நாள் நீளும் வரையில்!!
@⁨sow karthi⁩ @⁨Sapna Sis⁩

0 Comments