அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

இயற்கையின் காரிகை

மூன்றாம் இடம்


அன்பிற்குறிய ஆசிரியர்களுக்கு...


என்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் என் பெற்றோர்கள்...
உலகத்தையே எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் நீங்கள்...
வார்த்தைகளின் வடிவங்களையும்..எண்ணங்களின் எழுத்துக்களையும்..
உணர்த்தியதும் நீங்கள் தானே...
கரும்பலகையில் நீங்கள் சுண்ணாம்பு துண்டு 
கொண்டு எழுதுகையில்
நாங்களும் எழுதிட பல்பம் கொண்டு
ஆரம்பித்து எழுதுகோல் தூவல் என
படிப்படியாக உயர செய்தீர்களே...
எங்கள் எழுத்துக்களையும் மேம்படுத்தினீர்களே...
சிகப்பு மை கொண்டு திருத்தம் செய்து
எங்களையும் எங்கள் தலையெழுத்தையும்
வளர்ச்சி பாதை நோக்கி
மாற்றினீர்களே...
உயிரெழுத்துக்களின் உயிரையும்...
மெய்யெழுத்துக்களின் மெய்யையும்
உணர செய்து வெற்றியாளராய்
நல் வழி காட்டி
ஒழுக்கத்தையும் பொறுப்பையும்
கற்று கொடுத்தீர்களே...
பொறுமை என்பதை கற்று உணர்ந்ததை காட்டிலும்
உங்களை கண்டு தானே அதிகம் கற்றேன்..
மொழிகளின் இனிமையையும்.. கணக்கின் அளவீடுகளையும்..
அறிவியலின் மாற்றங்களையும்.. சமூக அறிவியலின் சமூகத்தையும் என
எத்துணை எத்துணை...
வயிற்று பசி நீக்கிட்ட பெற்றோர்களுக்கு
இணை நீங்கள் தானே அறிவு
பசியை போக்கியதால்...

@⁨Sapna Sis⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments