பெயர் : யுவன் K.பாபு
தலைப்பு : என் பார்வையில் எதிர்கால இந்தியா
முதலிடம்
இந்தியா !
இந்தியா !
அவள் பெயர் சந்தியா
சிந்தியக் கண்ணீருடன் சிறைப்பட்டு சீரழிந்த முல்லை
பூவாய் வாடியது இருட்டறையிலடா
சிங்கார நாட்டில் சிறைச்சாலையும்
பள்ளியறை தேசம்
பிழைகளை சீர் செய்யும்
வகுப்பறை ஆலயம்
மறு வாழ்வு புகுத்தும் ஆசான்களின்
வழித்தடம்
வாழ்க்கையை அழிக்கும் வார்டன் அரக்கர்கள் அராஜகம் எண்ணிலடங்கா ஏராளம்
திருந்தி வாழ நினைப்பவளுக்கு
நீதியால் நிகழ்ந்தது கேடு
ஆடை அவிழ்த்து அம்மணமாய் ரசித்தது
அதிகாரிகளின் உடல் திமிரு
உடல் உறுப்புகளை ஊறுகாயாய் சுவைக்கும் எச்சயாய் ஊறியது காமக் கிறுக்கு
திரையில்லாக்
கழிவறை
தண்ணீர் வசதி இல்லா
வாழ்வு முறை
துர்நாற்றத்தில் உறங்கும் அவலநிலை
மாதவிடாய் சூழ்ந்தால்
நாப்கீன் இல்லையென்றக் குறை
மீறிக் கேட்டால் ஆடையை தூக்கி பார்த்து பரிசோதனை செய்யும் வரம்பு மீறிய பொறம்போக்குகளின் தொல்லை
அப்பாவி பெண் சிறைக் கைதிகளின் வாழ்க்கை
அபாயகரமான மரணப் படுக்கை
இந்தியா !
இந்தியா !
ஆறாம் வகுப்பு அமலாவிடம்
ஆணுறுப்பை காட்டி அளக்கச் சொல்கிறான் ஆசான்
அறிவியலில் இவை தான் சிறந்தப் பாடமென்று பாலியல் தொல்லையும் கொடுக்கிறான்
ஆன்லைன் வகுப்பறையில் அரை குறை ஆடையில் அசிங்கமும் செய்கிறான்
சிந்தனைகளை சிதைத்தெரிய பருவத்தை
பகடையாய் வீழ்த்தவும் பார்க்கிறான்
பள்ளி குழந்தையென்றும் பாராமல்
தனிமையில் தடவித்தொட்டுப் பார்க்கவும் துடிக்கிறான்
பிஞ்சுக் குழந்தையின் கல்வி அரக்கனாய் வாழும் ஆசானிடம் சிக்கினால் வாழ்க்கையே கேள்விக் குறிதான்?
இந்தியா !
இந்தியா !
இந்துமதி நதியில் மூழ்கி இறந்துப்
போச்சு
வன்புணர்வு கொடுமையால்
வாழ்க்கையே வெறுத்தும் போச்சு
மூன்று முடிச்சு இட்டு மனைவியானால்
பெண் இயந்திரமாய் மாறியும் போனாள்
கணவனுக்கு மூடு வந்தால்
கட்டிலில் வேசியாய் கால் விரிக்கவும் சொல்கிறான்
காயம் சூழும் அளவிற்கு கட்டாயமாய்
காமம் கொள்ளத் துடியாய்
துடிக்கிறான்
கண்ணீர் விட்டு கதறி அழுதாளும்
கதறிடக் கற்பழிக்கிறான்
வெறிப் பிடித்த மிருகமாய்
சின்னா பின்னம் செய்கிறான்
மறுப்புத் தெரிவித்தால் இஷ்டத்திற்கு
காலால் எட்டியும் உதைக்கிறான்
ஒரு நாள் தொடர்ந்தது
இரு நாள் தொடர்ந்தது
நூறு நாள் தொடர்ந்தது
நூற்று ஒன்றாவது நாள்
வலியும் வேதனையும் சேர்த்து
நதியில் குதித்து தற்கொலையும் செய்தது
உயிரும் உலகை விட்டுப்
பிரிந்தது
பெண் என்பவள் பொக்கிஷம்
கிறுக்கானக் கணவன் கையில் சிக்கினால்
கிழிந்து நலிந்து போன பயனில்லாக் காகிதம்
இந்தியா !
இந்தியா !
மதுமிதா மாதவிடாயில்
தவியாய் தவித்தாள்
வலியை தாங்கும் சக்தியிருந்தும்
சடங்கு என்றப் பெயரில்
சாகடிக்கும் மூட நம்பிக்கையால்
சக்தியிழந்தாள்
சமையலறை சென்றால்
தீட்டு
ஆலயம் சென்றால்
தீட்டு
நடந்தால் தீட்டு படுத்தால் தீட்டு
முப்பது நாளில் மூன்று நாள்
இவள் தீட்டு
மீதி நாளில் இவள் தேவதை சிட்டு
தீட்டு என்றப் பெயரில்
தீயாய் சுட்டெரிக்கிறான்
அதே தீட்டை மீதி நாள்
கட்டிலில் கொஞ்சியும் குலவுகிறான்
பெண் பூவை தீட்டு என்றால்
படுக்கையை பகிரும் ஆண் எறும்பும்
ஒரு தீட்டு தான்
இந்தியா !
இந்தியா !
மாறு தட்டிய பெருமிதமா மானிடா
மானம் கிழிந்த இந்தியனென்று சொல்வதா ?
பெண் சுதந்திர நாடென்று நிம்மதியாய் உறங்கினேன்
காம இச்சையர்களின் ஈசல் தொல்லையால் உறவுகளை இழந்தேன்
நாக்கின் நரம்புகள்
கெட்டவார்த்தையாய்
கொட்டி முழங்கத் துடித்தேன்
கை விரல்கள்
பலத்த ஆயுதத்தை தேடி சுற்றித் திரிந்தேன்
அழகான மனைவி
வெளியில் வேலைக்கு சென்றால் வேசி
கேவலமான கணவனின் கையில் சிக்கியதால் வாழ்க்கை கேள்விக் குறி
பாவி மகளின் வாழ்க்கை
பரிதாபமாய் கடலில் மூழ்கி
செத்துப் போச்சு
இன்னுமாம் தீரவில்லை
கணவனின் சந்தேகப் பேச்சு
ஏன்?
கல்லூரிக்கு சேலையில்
சென்றாலும்
செக்ஸ்த் தொல்லை
பால் வாடிப் பள்ளிக்கு பாவாடையில் சென்றாலும்
செக்ஸ்த் தொல்லை
கீழாடை காற்றில் அசைந்தாலும்
செக்ஸ்த் தொல்லை
காமுகனின் காம வேட்டைக்கு
பலியான தங்கைகள் ஏராளம்
வாய் விட்டுச் சொல்ல முடியாமல்
முடங்கிக் கிடக்கும் பெற்றோர்களின்
பிஞ்சுக் குழந்தைகளின் உயிர் சேதம் பல்லாயிரம்
நீயாக படுக்கைக்கு வா
இல்லை
நானாக
பாழாக்கிவிடுவேன்
கல்ப்ரேட் காமுகனின்
மிரட்டலான காம வெறிப் பேச்சு
வறுமையின் வெறுமையில் வாழும்
தங்கைகளின் வாழ்க்கைத் தடம்
தலைகீழாய் புரட்டிப் போச்சு
பாலாப்போன பாலியல்
தொல்லையால்
பரதேசி நாய்களிடம்
மண்டியிட்டு மல்லாடி
மானத்தைக் காக்க
உயிரை எய்திய உத்தமிகளின்
கதறல் சத்தம் காதை கிழித்துப் போச்சு
கேட்டும் கேட்காதச் செவிடாய்
ஜீரணித்து
தட்டிக் கேட்க துப்பில்லாத்
துடைப்பமாய் சட்டங்கள்
பதுங்கி பாழாய்ப் போச்சு
உறங்காமல் உத்தமிகளின் ஆத்மாக்கள் கண்ணகியின் வடிவில் கண்முன்னே காட்சியாச்சு
அய்யோ !!!
கண்ணகிகள் இருந்து என்ன
பயன் ?
சுதந்திர இந்தியாவில்
கண்ணகிகளை
காக்கும் பாதுகாப்பான காவலாளிகள் தான் யாரும் இல்லையே என்ற கேள்விக் குறியும் வந்தாச்சு!
இந்தியா !
இந்தியா !
சாதி மதம் அரசியல்
இது எனக்குத் தேவையில்லை
நாட்டின் தலைவன் அவன் இவன்
இப்படி எவனையும் நம்பிப் பயனில்லை
ஊழல் கொள்ளை இதைக் கண்டு கவலையும் இல்லை
மறைமுகமாய் பெண்மையை சூறையாடும்
காமக் கபோதிகளைக் கண்டு தான்
அச்சத்தில் உறக்கமில்லை
முதலில்
நான் பிறந்து தாய்ப் பெண்ணின் கருவில்
இரண்டாவது
நான் வளர்ந்தது பெண் தங்கை உறவில்
மூன்றாவது
நான் ஆளாகப் போவது மனைவியின் காதலில்
நான்காவது
நான் மலரப் போவது
பெண் மழலையின் குறும்பில்
பெண் இல்லையெனில் ஏதுமில்லை
இவளைத் தவிர இந்தியாவில் மிகப் பெரும் பொக்கிஷமும் ஒன்றுமில்லை
பொக்கிஷத்தை பொசுக்கும் பொறம்போக்கு பொறுக்கிகளுக்கு
ஓர் குறுஞ்செய்தி ஒன்று சொல்கிறேன்
தவறாமல் அனைவரும் படிக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன்
அருவாள் ஒன்று
தீட்டி வைத்தேன்
அரிப்பெடுக்கும் அரக்கர்களின்
விதைப் பைகளை அறுத்தெடுப்பதற்கு
கல்லூரியில் கல்வி கற்கும்
கண்மணியிடம் அரிக்கிறது என்றாயா?
வேலை செய்யும் மங்கையிடம் சில்மிஷம்
செய்யவா என்றழைத்தாயா?
பள்ளிக் குழந்தையிடம் பாலியல் தொல்லை கொடுத்தாயா?
மறவாமல்
என் பாசமலர் தங்கையிடம் அரிப்பெடுக்கும் இடத்தை மட்டும் சொல்
அண்ணனாக
என் கடமையைச் செய்திட விரைந்து வருகிறேன்
அரிப்பெடுக்கும் இடத்தை அடியோடு அறுத்தெடுக்க பாய்ந்தும் வருகிறேன்
எதிர்கால இந்தியாவில் பெண்களை காக்க
அரை டன் சட்டப் புத்தகம் எதற்கு
அரை கிலோ எடையுள்ள அருவாள் போதும் நமக்கு!!!
@Kamu pillai Sis @Barathi Pratibha @Sowbarnika Pratibha
0 Comments