என் பார்வையில் எதிர்கால இந்தியா

ம.சுதா கவி 
மதுரை மாவட்டம்

3ம் இடம்


என் பார்வையில் எதிர்கால இந்தியா*
        
 ( *வல்லரசு கனவு வழியே எதிர் கால இந்தியா* )

கொரோனா சட்டென்று உதித்து மானிடர்தனை கட்டிப்போட்டது
எத்தனை உயிர்கள் துடிதுடித்து கரைந்து முடிந்தது
கண்ணீர் ஏந்தி எத்தனை பேர் உயிர் மண்டியிட்டது !

முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர் நாம் - மூன்று அலைகள் தாண்டி கொடிய நோயால் உயிர்கள் இழந்தோம் நாம் !

இளையோர் ஊரடங்கு சிறையில் அடைந்து 
கல்வி அறிவு மழிந்து
சிறுவர் சீர்திருத்த கைதியானார்கள் !

உயிர்கள் மடிந்தால் மக்கள் தொகையில் பிரச்சினை இல்லை
கல்வி இழந்தால் இளைய சமுதாய எதிர்காலம் பகையில் 
சிதைத்துவிடும் !

அடிப்படை தரமின்றி கல்வி தொடரும் பள்ளி மாணவர்களும் 
தகுதியற்ற பட்டம் பெற்ற
இளைய சமுதாயமும் 
கேள்வி குறியாய் வேலையின்றி வெறுமை நிலை !

இணையத்தில் மூழ்கி மூச்சு நின்றாலும் இணைய விளையாட்டு தொடர்வேன் 
எப்போதும் முப்பொழுதும் தொலைபேசியோடு வாழ்வேன் என்று அடம்பிடிக்கும் இளைய இந்தியா !

படிப்பிற்கு மட்டுமே ஊரடங்கு
பரவாசமாய் ஊர்சுற்றும் உறவினர்கள்
கொடிய நோயோடு உறவாடும் மடமை மக்கள் !

இளைய சமுதாயத்தின் கைகளிலே இந்தியா 
இளைய சமுதாயத்தின் எதிர்காலம் எங்கே ?
வல்லரசை நோக்கி கனவு உலகில் கடந்து நடந்து செல்கிறதே.....
எதிர்கால இந்தியா !


@Sapna 

@Kamu Pillai

0 Comments