பெயர் : யுவன் K.பாபு
முதலிடம்
தலைப்பு : அண்ணாவும் பெரியாரும்
திண்ணைப்பள்ளியில்
பயின்றவன் !
புராணச் சொற்பொழிவாளர்களை குறுக்கு கேள்வியால் திணறவைத்தவன் !
ஜாதி மறுப்புத் திருமணத்தை முன் நின்று நடத்தி வைப்பவன் !
சமபந்தி போஜனத்தால் ஜாதி மதத்தை ஒழித்தவன் !
துறவுக்கோலம் துறவியாய் இவ்வுலகை அளந்தவன் !
எண்ணற்ற அனுபவத்தால் ஆழ்மன
மூட நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி
வைத்தவன் !
பிளேக் நோய் மீட்பு பணித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவன் !
இறந்தவர்களை தோளில் சுமந்து தானே அடக்கம் செய்தவன் !
ஆயிரம் எதிர்ப்புக்கிடையில் தங்கைக்கு விதவை திருமணம் முடித்தவன் !
விதவை திருமணத்தால் மறு வாழ்வை மீட்டுக் கொடுத்தவன் !
சமுதாயப் பணியில் தன்னையே அர்ப்பணித்தவன் !
தீண்டாமை ஒழிப்பில் தீயாய்
உழைத்தவன் !
காந்தியாரின்
நிர்மாணத் திட்டத்தை
ஏற்றவன் !
ஆடம்பர ஆடையை தூக்கியெறிந்து
கதர் ஆடைக்கு மாறியவன் !
கள்ளுக் கடை மறியலில் சிறைவாசம் கொண்டவன் !
புதிய மாற்றம் ஒன்று நிகழ்த்த வேண்டுமென்று அனலாய் குடி அரசு இதழை தொடங்கத் திட்டமிட்டவன் !
ஆதி திராவிடர்களும் மனிதர்களே
கோவில் நுழைவாயில் அனுமதிக்க போரிட்டவன் !
உரிமைகள் உண்டியலாய் உடைந்து தரையில் மிதிபடும் செம்மண் துகளாய் தூளானதில் மனம் உடைந்தவன் !
சினமுற்ற வெள்ளைத் தாடியன்
வேங்கையாய் வீற்று நின்று !
மனுதர்ம சாஸ்திரத்தையும் ராமாயணத்தையும் தீயிட்டு கொளுத்துங்களென்று
தீக்குரலால் மறுப்புகளை சுட்டெரித்தான் !
சுயமரியாதை மாநாட்டை பட்டித் தொட்டி முழுதும் கம்பீரமாய் முன் மொழிந்தான் !
பகுத்தறிவு ஏட்டில் தமிழ் எழுத்துச் சீர் திருத்தத் தொகுப்பை திமிராய் தொடங்கியும் வைத்தான் !
ராஜாஜியின் இந்தித் திணிப்பு,
கல்வி ஒழிப்பு சாமர்த்திய ஊழலை !
தமிழர் மாநாட்டில் எரிமலையாய் எதிர்த்து எழுச்சி நடையில் முதல்வரையே பதறவைத்தான் !
அறிஞர் அண்ணாவே என்னையும் வியக்க வைத்த வித்தகன் தாடிக்காரன் !
ஆறறிவில் பகுத்தறிவென்னும் ஏழாம் அறிவை புகுத்தியவன் ஈரோட்டுக்காரன் !
பெரியாரை பொடி வைத்து
பொசுக்கும்
குள்ள நரிகளுக்கு ஓர் குட்டி கவி !
தனி மனிதனின் களவியல் புலவியல் வாழ்க்கை ஆராயாதே !
சமூகத்திற்கு செய்த நன்மைகள் என்னவென்று ஆராய மறவாதே !
தீண்டாமை ஒழிப்போம் !
அனைவரும் சமமென்று உணர்வோம் !🔥
@Kamu pillai Sis @Sowbarnika Pratibha @Barathi Pratibha
0 Comments