இயற்கையின் காரிகை..
தலைப்பு: தெய்வ திருமகள்
நங்கை அவள்...
பல நலினங்கள் நிறைந்தவள்...
கருவறையில் சீராட்ட தான் செய்தார்கள் தங்கமாய்...
வெளியேறிய போதும்
பாசமழை கொட்டி தான்
தீர்த்தனர்...
சில வருடங்களில் ஏற்பட்ட ஹார்மோன் குறைபாட்டில் தெரிந்தாள் தகரமாய் ...
தன் கொடியில் பூத்த முல்லை அவள்
என்பதை மறந்து வீதியில் தூக்கி
வீசினார்களே...
போகும் திசை அறியா அப்பூக்கள்
எங்கோ மாலையாக மலர்ந்தாலும்
மதிப்பதில்லையே...
அவர்களும் மனிதர்கள் தானே
கழிப்பறையில் கூட
அதனை மறந்து விலக்கியும் வைக்கின்றனரே..
துரத்தியடிக்கவும் செய்கின்றனரே...
அவர்களுக்கு சூடிய பெயர்கள் தான் எத்துனை...
எள்ளி நகையாடல்கள் தான் எத்துனை...
வெளி சொல்ல முடியா அவர்கள் வேதனை எல்லாம்...
கை தட்டி வரும் சப்தமாய்...
அதனை உணரா மனமே...
அவர்களும் நம் இனமே..
தெய்வம் செய்த சிறு பிழை அவர்கள் ..
அதனை திருத்தம் செய்து
அவர்களாக உடலில் மாற்றம் செய்து
வேள்வியோடு வாழ்வதில்
உனக்கென்ன தொல்லையோ...??
@Barathi Pratibha
@Kamu pillai Sis
0 Comments