தெய்வ திருமகள்(ன்)

மாதவன் கவிச்சிதறல்

திருநங்கை :

💥ஆண்டவன் படைப்பில் ஓர் அதிசயம்,
அரவணைத்தால் அனைத்துமிங்கே.  சாத்தியம்..

💥பிறப்பில் ஆணாகினும்,
உணர்வுகளில் பெண்ணாகி,
இழிவு பட்டம் கொடுக்கிறது இச்சமூகம்..

💥விலக்கும் உதடுகள், விடியல் கொடுக்காவிடிலும், வாயால் விரதமிருந்தால் கூட போதும்..

💥ஆணின் பாதி, பெண்ணின் மீதி,
இறைவனுக்கு நிகரல்லவா? இப்படைப்பு..

💥காணொளி ஒன்று கண்டேன்,
திருநங்கையிடமிருந்து,
எங்கள் தேவை,
உங்கள் பார்வை மாற்றமே என்றார்.

💥'ஒரு முறையேனும் என்னை "அம்மா" என்று அழைத்து பார், ஆருயிரையும் உனக்கே தருவேன்'
என்ற ஓர் ஏக்க குரல் அவள் நாவிலிருந்து..

💥பேருந்தில் அவள் உலாவில், "சாப்பிட்டாயா?"
என்ற வினா கூட விடை கொடுக்குமாம்  அவர்களின் அனைத்து சிக்கல்களுக்கும்...

💥கோடானு கோடி நன்றிகள்,
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு,
அரவாணி என்று அலைகளித்தோரும்,
சற்றே திரும்பி உற்றுநோக்கினர்,
திருநங்கை என்று மரியாதை நீட்டும் கணத்தினில்...

💥கற்பழிப்பவனையும்,
கடத்தல்காரனையும்,
கள்ளதனமுடையவனையும், ஏற்கும் இவ்வுலகு,
உருவ வேற்றுமையை ஊதி பெரிதாக்குவது ஏனோ?

💥குடும்பமும் ஒதுக்கி,
குலமும் விளக்கி,
குறுகிய மனதோடு,
கொடுமைகள் மட்டும் தானா? அவர்களுக்கு..

💥எதற்கு இத்தனை பாகுபாடுகள்?
உருவத்திலும், பேசும் குரலிலும் சற்று மாற்றமே !
மறக்க வேண்டாம்,
அவர்களும் மனித உறவுகளே..

💥காலம் கனிகிறது இங்கே !
அவர்கள் இங்கே பள்ளி, உயர் பணி, அரசு பணி என அனைத்திலும் பதித்து வருகின்றனர், தங்கள் கால் தடங்களை..

💥ஒரு நாள் வரும்,
அவர்களும் உலகை ஆளும் நிலை,
ஏற்போம் அவர்களை,
கோர்ப்போம் கைகளை..

💥அவர்களையும் மனிதராய் மதிப்போம், 
அழகாய் மனிதம் காப்போம்..

💥அவர்களுக்கு ஆதரவாய் என்றும் ஒலிக்கும் எமது குரல்..
ஒரு சாமனியனின் குரலாக.....

     -மாதவன் கவிச்சிதறல்#

@⁨Kamu pillai Sis⁩ 
@⁨Barathi Pratibha⁩

0 Comments