பெயர்
அன்பு மட்டும்
அருண்
மூன்றாம் இடம்
தலைப்பு
என் பார்வையில் எதிர்கால இந்தியா
இந்தியா என் இந்தியா
எவனுக்கும் அஞ்சாத நாடு
எதிரி வந்தாலும் ஏரி அடிக்கும் பாரு
அது சரி
வல்லரசு நாடுகள் பல உண்டு
என் அரசு நாடு வல்லரசாவது எப்பொழுது
பேருக்கு வல்லரசு என்று சொல்லி கொண்டு
ஊர் ஊராய் உலகம் சுற்றும் நல்லவரே
நாங்கள் ஒரு வேலை உணவின்றி தவிப்பதை கொஞ்சம் பாருங்களே
கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் குள்ள நரி கூட்டங்களே
நாங்கள் தெரு கோடியில் கிடப்பதை
உங்கள் கண் விழித்து கொஞ்சம் பாருங்களே
லட்சம் லட்சமாய் லஞ்சம் கேட்க்கும்
லட்சாதிபதிகளே
நாங்கள் உங்களை போல லட்சாதிபதி இல்லை என்பதை கொஞ்சம் கூர்ந்து கவனித்து பாருங்களே
எத்தனையோ வல்லரசு நாடுகளில்
அடுக்கு அடுக்காய் வீடு இருக்கு
நாங்கள் வல்லரசு என்று சொல்லும் இந்நாட்டில்
குடிசை மட்டும் தானே அதிகம் இருக்கு
அதிகாரத்தில் உள்ளவன் அடுக்கு மாடி கட்டுறான்
அடிமையாக உள்ளவன்
அடுப்பாங்கரையில் கிடக்குறான்
கேட்டா நாங்கள் வல்லரசு
என்று என் தாய் மண்ணில்
ரோட்டில் தூங்காமல்
பிச்சை எடுக்காமல்
பிஞ்சு குழந்தைகள்
வேலைக்கு செல்லாமல்
ஒரு ஜான் வயிற்று பசிக்காக தெருவில் நில்லாமல்
பார்க்கும் இட்மெல்லாம்
பஞ்சம்
பசியால் துடிப்பது வசம்
பாலியல் கொடுப்பது கொடுமை
அதை பார்த்து நிற்பது
இந்த அரசோட கடமை
அனைத்தும் ஒழித்து
அமைதியை திருத்து
அன்று சொல்கிறேன்
என் இந்தியா வல்லரசு
என்று
@Barathi Pratibha
@Kamu pillai Sis
1 Comments
அருமை
ReplyDelete