தலைப்பு : பிணவறைக்குள் நான்.
இரண்டாம் இடம்
பெயர்: யாதுமானவள் மீரா.
உலகமே என் உறவாய் நேசித்தேன்...
நேசித்த எல்லோரும் முகமூடி அணிந்த வேடதாரிகளே!
அனைவரையும் வெறுத்த நான் வேறு ஒரு உலகத்தை நாடினேன்....
நாடிய உலகமோ என்னை அடிமையாக்கியது!
இணையத்தில் எண்ணற்ற உறவுகளை தேடிக்கொண்டேன்.....
ஒருமுறை கூட பார்த்திடா இந்த உறவுகளிடம் பாசத்திற்கு பஞ்சமில்லை, வேஷத்திற்கு வேலையில்லை!
சிறகடித்து பறந்திட்ட நானோ இன்று என்னை நானே கூண்டில் அடைத்துக் கொண்டேன் வஞ்சக உறவுகளிடமிருந்து!
சிறகடிக்கும் பறவையே உன் சிசுவிற்காக பறக்கிறாய் கூண்டு தேவையில்லை....
என்னை நானே மாய்த்துக் கொள்ள இந்த பிணவறையும் கத்தியும் எனக்கு மிக மிக தேவையே!
Yathumaanaval_meera.
@Kamu pillai Sis
@Barathi Pratibha
0 Comments