பெயர் :-
கவிதையின் காதலன் பாண்டி
முதலிடம்...
தலைப்பு:-
அண்ணாவும் பெரியாரும்
தீண்டாமையை அழித்திடவே!
அதற்காக உரிமை குரல் கொடுத்திடவே !
எப்போதும் போராளியாக வாழ்ந்திடவே !
இவர் கருப்பு உடையில் வலம் வந்தாரா...!!
இவர் பெயரோ ஈ. வே. ரா ...!!
சாதி இருப்பது தான் சுதந்திர நாடு ஆகுமா...
சுதந்திர நாடாக இருப்பதில் சாதி தான் இருக்கலாமா...
இவர் முதல் கொள்கை சாதி ஒழிப்பு...
ஒவ்வொரு போராட்டத்திலும் இவர் வாழ்க்கையோ முழு அர்ப்பணிப்பு...
நீட் தேர்வு எதிர்ப்புகாண முதல் படியை அன்றே கோரிக்கையை வைத்தார்...
பிள்ளையார் சிலையை உடைத்து மதங்களை எதிர்தார்...
புத்தரின் கொள்கை விரும்பினார்...
குற்றவாளி கூண்டில் ஏற்றியபோதும் அப்போது தன் கருத்தை ஆழமாக விதைத்தார் ...
இதுவரை எந்த போராட்டத்திலும் பின் வாங்கியது இல்லை...
உரிமைக்கான போராட்டம் எங்கே நடந்தாலும் அங்கே உயிர் கொடுப்பது அவரின் வார்த்தைகளும் அவரின் உருவ சிலைகள் தானே...
மனிதனின் உரிமைக்கான தன் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர் ஈ. வே. ரா தானே...
சட்ட புத்தகங்கள் எரித்தார் என்ற பேச்சு இருந்தாலும்...
அதில் சாதி தீண்டாமை சொல்லிடும் குறிப்பிட்ட பக்கங்களை மட்டுமே அவர் எரித்தார்...
சரித்திரம் படைத்தார் சாதியை மிதித்தார்...
அறிஞர் அண்ணா திராவிட இயக்கமே இவர் பின்னால்..
இந்தி திணிப்பு எதிர்புக்காக தொடர்ந்து போராடி..
தமிழ் மொழிகளுக்காக போராடி மதராச பட்டிணமோ தமிழ்நாடு என்றானது ..
ஆட்சியில் நிதி நெருக்கடி நிலையிலும் ஏழைகளுக்கு அரிசி வழங்கினார்..
விவசாயிகளுக்கு இலவச பட்டாக்களை தர ஆணையிட்டார்...
புன்செய் நிலவரியை ரத்து செய்தார்..
சுயமரியாதை திருமணம் சட்டமாக்கப்பட்டது..
இலவச பள்ளி கல்வியும்
கலப்பு திருமணம் ஊக்குவிக்கும் விதம்..
விதவை திருமணம் செய்தவருக்கு வேலைக்கு முன்னுரிமை...
இப்படி பட்ட இருவருமே திராவிட தலைவர்கள் போராளிகள்....
@Kamu pillai Sis @Sowbarnika Pratibha
0 Comments