தலைப்பு :திருநங்கை
குரலின் கம்பிரத்தில் திரு என்று ஆணாகவும்
நாணத்தில் நங்கை என்று பெண்ணாகவும் பிறந்தோம்
தன்னுள் பாதியை தன் துணைக்கு தந்து அர்த்தநரிஷாவாக வாழும்
எம்பெருமான் படைத்த அற்புத படைப்பு
ஆனால் ஏனோ
இந்த
சமூகதின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்
பெற்றோர் பாசம் இழந்து
உறவுகளின் ஆதாரவுகளை கடந்து
தனித்திருந்து தனக்கென்று
தன்உறவுகளோடு தனியுலகம் படைத்தோம்
என்னை சக மனிதனாக
பார்க்காமல்
கைத்தட்டு ஓசையை கேவலமாக பார்க்கும் என் சமூகம்
ஏனோ
எங்களின் வலிகளை உணர்வது இல்லை
பள்ளிக்கூட அறை முதல்
கழிவறை வரை
எல்லா கதவுகளும் எங்களுக்கு என்று திறக்குமோ
பேருந்து பயணத்தில்கூட என்னருகில் இருக்கும் இருக்கைகள் காலியாகதான் இருக்கிறது
ஆண் எவ்வழியோ பெண் எவ்வழியோ
அவ்வழிதான் நாங்களும் வந்தோம்
எங்கள் வாழ்க்கைக்கு வழி கொடுக்கவேண்டாம்
எங்களுக்கு வலி கொடுக்காமல் இருந்தால் போதும்... 🙏🙏
@barathi bashki
@kaamu pillai
0 Comments