பெண்ணியம்

தலைப்பு : வளர்ந்தும் வளரும் பெண்ணியம் 

பங்கேற்பாளர்

பெண்ணே நீ அடிமையின்
அடையாளம் அல்ல!

மதிக்கப்படுபவள் நீ!
போகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல!

வீட்டிற்குள்ளே உன்னை பூட்டி வைத்தவர் தலை கவிழ்ந்து விட்டது!

கல்வி, வேலை, ஆட்சி உரிமை அனைத்தும் சம உரிமை இன்று உன்னிடம்!

அவள் திருமணத்திற்கு முன் தந்தை!

திருமணத்திற்கு பின் கணவன்!

முதுமையில் பிள்ளை!

சார்ந்த காலங்கள் மறைந்தன!

உன்னை நிலவோடு ஒப்பீடுவார்கள்
உன்னை சூரியனிடம் ஒப்பீடுவேன்!

பெண் பெறுபவள் அல்ல
தருபவள் பெண்ணியம் இன்றும் என்றும் வாழும் வளரும்!



இரா. கலைவாணி கடலூர்.

0 Comments