அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

பெயர் : முகில் மதி

தலைப்பு : *அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு*

"ஆ"னா போடச்சொல்லி - நீ
அடிக்கும்போது புரியவில்ல....
என்னையும் ஓர் கவிஞனாய்
மாத்துவனு தெரியவில்ல...!

ஆசையாய் சொல்லி வச்ச,
சாந்தமாய் சாதிக்க சொல்லி...
இன்னொரு வைரமுத்துவா,
நீ வரணுமுன்னு...

மண்டையில நீ கொட்டுப்போட்டு,
வகுப்புக்குள்ள நான் முட்டிபோட்டு,
கண்ணீர் விட்டு நிக்கையில - நீ தான்,
என் எதிரின்னு நினைச்சுப்புட்டேன்...!

நெனச்ச நெனப்பு எல்லாம்,
பொய்யாதான் போய்டுச்சு..!
நீ பட்ட கஷ்டத்துல -கவிஞன்னு
என் பெயர் மாறிடுச்சு..!

கடைசி மூச்சு நிற்கும்வர
கலையாமல் இருக்கும்மய்யா...!
நான் கல்லறைக்குப் போனாலும்,
என்கவி உன் பெருமை சொல்லும்மய்யா...!
@⁨Kamu pillai Sis⁩ @⁨Sapna Sis⁩

0 Comments