என் பார்வையில் எதிர்கால இந்தியா

இயற்கையின் காரிகை

இரண்டாம் இடம்

என் பார்வைவையில் எதிர்கால இந்தியா


சுதந்திர இளைஞர் கனவுகள்
இணையத்தில் முடங்கியதோ..

மக்களாட்சி என்று பெயருக்கு
மட்டும் கட்சிகள் குவிகிறதோ..

சட்டம் ஒழுங்கு, 
நல வாழ்வு, 
பெண்சுதந்திரம் 
அகராதியில் மட்டும் வாழ்கிறதோ...

மக்கள் நல திட்டம் என்று பலதும்
அறிவித்து 
நலம் காண்பதும் யார் தானோ...

புதிதாய் வகுத்த பாட திட்டமும்...
தேர்வு அறிக்கையும்...
தற்கொலைக்கு தானோ...

குற்றம் சாற்றுவது மட்டும் எளிமையாக..
அதற்கான தீர்வோ கடுமையாக...

எதிர்கால இந்தியா கண் முன் தெரியுதே..
ஃப்ரீ ஃபயர்.. 
பப் ஜி யுமாக விளையாடி
உலகை மறந்ததையும்...
இளைஞர்களின் ஞாபக
சக்திகளை புதைத்ததையும்...

பல அறிஞர்கள் நம்பிய தூண்கள்
இளைஞர்கள் 
இன்று நம் நாட்டில் இல்லை...
அயல் நாட்டில் வேலை செய்கின்றனர்
அடிமைகளாக...

என்னவாகும் நம் எதிர்கால இந்தியா
என்ற அச்சம் மட்டுமே வாழுது
என் பார்வையில்...

ஜல்லிக்கட்டு அழியாமல் 
காக்க கூடிய
கூட்டமெல்லாம்..
விவசாயம் அழியாமல் இருக்க கூடவில்லையே..

வெளிநாட்டு பணமும்
சொகுசு வாகனமுமாய் திசை மாறி போகுதே...

போதும் என்ற மனமும் இல்லாமல் போனதே...

சாதிகள் இல்லையென்று படித்த நாமே
சாதிக்குள் மூழ்கி கிடக்கின்றோமே...

அந்நிய பொருட்கள் விற்பனையாக
நம்மூர் பொருட்களோ முடங்கி மடிந்து போனதுவே...

மண் பாண்டம் இல்லா வீடுண்டு...
நெகிழி இல்லா வீடு இல்லை..

நம்பிக்கை கெடுத்திட ஆளுண்டு...
அதனை வளர்த்திட ஏனோ ஆளில்லை.....

அடுத்தவர் வீடு எரிகையில் 
தற்படம் எடுக்கும் கூட்டமே...
நம் நாடே எரிகிறதே...
அதில் நாமும் கருகுகிறோமே...
வளரும் பச்சிளம் பிள்ளைகள் எதிர்காலம் பொசுங்கிடுதே...
அறியவில்லையோ நீயும்...

பாலியல் வன்கொடுமையில் பால் மனம் மாறா பிள்ளையும் சடலாமாகுதே...

ஊடகங்களில் 
இணையங்களில் மூழ்கிய
இளைஞர்களே
கொஞ்சம் கண் விழித்து 
நம் நாட்டையும்
பாருங்களேன்...

அனுசக்தியை ஆக்க வழியில் செலவிடு...
அராஜகத்தை நாட்டை விட்டு ஒளித்திடு...

சீரிடும் சிங்க இளைஞனே..
சிந்தித்து செயல்பட்டு
சீர் திருத்தமும் செய்திடு...

முதியவர்களின் விவேகத்தையும்
இளைஞனின் வேகத்தையும்
ஒன்றாக்கினால்...

நம் எதிர்கால இந்தியா
வல்லரசாக மாறிடுமே...

காம கொடூரர்கள் அழிந்து மீண்டும்
கர்ம வீரர்கள் குடி பெயர்வார்களே.....

@⁨Barathi Pratibha⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments