பெயர் : கவிதையின் காதலன் பாண்டி
தலைப்பு : *அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு*
அ - அகிலமும் அறிய வைத்து
அறிவையும் துளிர் விட வைத்ததும் நீங்களே...
ஆ - ஆதி முதல் அந்தம் வரை தெளிவுரை தந்ததும் நீங்களே...
இ - இயற்றியானாயே நல்வழி படுத்தினாயே நீங்களே என்னை முழுவதுமாக..
ஈ - ஈசன் கூட ஆசான் உனக்கு அடுத்தது தானே..
மாதா, பிதா, குரு, தெய்வம்...
உ - உண்மையும் அதன் உவமையும் யாது என்று அறிந்திடும் பக்குவம் நீங்களே தந்தீர்கள்...
ஊ - ஊரெங்கும் என் பெயர் உயர்ந்திட நீங்கள் தானே ஊக்கம் தந்தீர்கள்...
எ - எழுத்தறிவு முதலாய் தந்ததும் நீங்களே என் முதல் துணை எழுதுகோலும் உங்கள் கைகளே...
ஏ - ஏழை என்று பாராமல் கல்வியை நீங்கள் தானே இலவசமாக தந்தீர்கள் அரசு ஆரம்ப பள்ளியில் அரச மரத்தின் அடியிலும்...
ஐ - ஐந்து பூதங்கள் பற்றியும்
ஐந்து அறிவு உயிர்களிடமும் அன்பு காட்டிட உங்களை தானே பின்பற்றினேன்...
ஒ - ஒவ்வொரு ஆண்டும் புதிய அவதாரம் நீங்கள் எடுத்தாலும்...
ஓ - ஓர் இடத்தில் நீங்கள் இருந்து கொண்டு எங்களை வாழ்க்கையில் உயர்த்தி பார்ப்பதும் நீங்கள் தானே..
ஔ - ஔடதம் எழுத்துக்களிலும் இருப்பதையும் உங்களிடம் தானே கற்றுக் கொண்டேன்...
ஃ - ஃபேஸ்புக்கிலும் அலைபேசியிலும் இப்போது வாழ்த்துக்கள் மட்டுமே சொல்ல முடிகிறது
ஒவ்வொரு ஆசிரியர் தினத்திற்கும் ....
என்று நேரில் பார்க்கும் தருணம் வந்திடுமோ? அன்றும் ஆசிர்வாதமும்...
அப்போது செல்லமாக நீங்கள் தட்டிக்கொடுப்பதை மீண்டும் வாங்கிடவே ஆசை ...
@Sapna Sis @Kamu pillai Sis
0 Comments