ம.சுதா கவி
மூன்றாம் இடம்
மதுரை மாவட்டம்
*பெண்ணியம்*
( *பெண்ணின் பல கோணங்கள்* ) :
மாதராய் மண்ணை ஆண்டோம்
பேதையாய் மடமை அழித்தோம்
மகளாய் மகிமை பெற்றவள்
நங்கையாய் நலினம் உடையவள்
காரிகையாய் கானகம் படைத்தவள்
ஆடவளாய் பருவம் கொண்டவள்
பாவையராய் பாரினில் பிறந்தோம்
வஞ்சியாய் நீதிவலம் வந்தோம்
தையலென்றே நெசவு ஆனோம்
கோதை கண்ணனை சூழ்ந்தோம்
பூவையாய் மருத்துவம் புகுந்தோம்
மதங்கியாய் மாசு துடைத்தோம்
காந்தையாய் விண் அளந்தோம்
மாதுவாய் தேசம் காத்தோம்
யுவதியாய் ஆழி ஆய்ந்தோம்
விறலியாய் இசை தவழ்நதோம்
சுந்தரி சூழ்ச்சி கலைந்தாள்
மடவோள் வீரம் ஏந்தினோம்
அணங்கு பெண்ணியம் காத்தே
மின்னாய் காரிருள் ஒளிர்வோம்
@Sapna
@Kamu Pillai
0 Comments