சிறுகதை :
வெற்றியாளர்
தலைப்பு *தொலைபேசிக் கூண்டில் அம்மா*
அம்மா காற்றோடு நிலவின் ஒளியில் சோறு ஊட்டிய நாட்கள் காற்றோடு போயிற்று அம்மா.அன்பாக என்னை அரவணைத்த நாட்கள் காற்றோடு போயிற்று அம்மா.நான் அழும்போது என்னை கொஞ்சி கொஞ்சி கெஞ்சுவாயே அந்த நாட்கள் காற்றோடு போன சொல் ஆயிற்று அம்மா.அம்மா என்று நான் அழும்போது ஓடோடி வந்து என்னை முத்தமிட்டு தழுவுவாயே அந்த நாட்கள் எல்லாம் காற்றோடு போன சொல் ஆயிற்று அம்மா.உன் பக்கத்தில் அமரவைத்து எனக்கு பாடம் சொல்லி தந்தாயே அம்மா.அந்த அத்திப்பூ நாட்களெல்லாம் காற்றோடு போன சொல் ஆயிற்றே அம்மா.என்னுடன் சேர்ந்து நீயும் சிறு குழந்தையாய் மாறி என்னுடன் விளையாடிய நாட்கள் காற்றோடு போன சொல்லாயிற்று அம்மா.என் தலை வருடி என்னை உன் இனிய குரலால் பாடல்கள் பாடி தூங்க வைத்த நாட்கள் காற்றோடு போன சொல்லாயிற்று அம்மா.பசி என்று அழும் முன்பே எனக்கு பாலூட்டி பசி தீர்த்தவள் நீயே அம்மா.ஆனால் இப்போது பசி என்று அழுதாலும் பசியாற்ற நேரம் தாமதிக்கும் காலங்கள் ஆயிற்று அம்மா.ஏனென்றால் எல்லாமாய் உன் கையில் தொலைபேசியாய் மாறியதே அம்மா.அம்மா உன்னுடன் அன்பாய் பேசிய நாட்கள் காற்றோடு போன சொல்லாயிற்று அம்மா.இப்பொழுது உனக்கு எல்லாமுமாய் தொலைபேசியாய் மாறிவிட்டதே அம்மா.தலை வருடி தூங்க வைக்கும் போதும் உன் கைகளில் தொலைபேசி தழுவல் ஆயிற்றே அம்மா.எனக்கு சோறு ஊட்டுவதை விட அந்த தொலைபேசியை பார்த்து சோறூட்டிய நாட்களாய் மாறிவிட்டதே அம்மா.
அன்பாய் துள்ளி விளையாடிய நேரத்தில் நான் தனிமையில் நீயோ தொலைபேசியில் ஆழ்ந்தாய் அம்மா.
பசி என்று கூறினாலும் உன் தொலைபேசி உரையாடல் முடித்துவிட்டுத்தான் எனக்கு சோறு ஊட்டுகிறாய் அம்மா.
ஆம் நான் உன் பக்கத்தில் அமர்ந்து நீ பாடம் சொல்லித்தர உனக்கு நேரம் இல்லையே அம்மா.எப்போதும் தொலைபேசியுடன் உரையாடுவதில் தான் நேரம் கழிக்கிறாய்.
அம்மா தொலைபேசி வரும் முன் இருந்த நம் உறவு இப்போது காற்றோடு போன சொல் ஆயிற்று அம்மா.நீ அழகாய் என்னை கொஞ்சி வருடிய நாட்கள் எல்லாம் காற்றோடு போனா சொல்லாயிற்று அம்மா.
சாரா
0 Comments