பெயர்
அன்பு ❤️ மட்டும்
அருண்
மூன்றாம் இடம்
தலைப்பு
பெண் என்பவள்
பெண்ணினம் நம்மை காக்கும் உயிரினம்..
தன் உயிர் கொடுத்து உயிர் காப்பாள்
உத்தமியாக உயர்ந்து நிற்பாள்
அன்புக்கு அளவு இருக்காது
ஆசைக்கு எல்லை இருக்காது
பாசத்துக்கு பஞ்சம் இருக்காது
பணிந்து செல்வதில் வஞ்சம் இருக்காது
பாசம்னு வந்து விட்டா
பணிந்து செல்லுவா
கோவமுனு வந்து விட்டா
துணிந்து கொல்லுவா
எதிரினு வந்து விட்டா
தூக்கி அடிப்பா
எமனே வந்தாலும் ஏறி மிதிப்பா
அவள் இருக்கும் வீடுகள் கோவிலாகும்
அவள் இல்லாத வீடுகள்
குப்பையாகும்
தாயில்லா பிள்ளை
தறுதலை ஆகும்
தாயுள்ள பிள்ளை
தலைவனாகும்
அவள் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை
அவள் தானே நம் தொடக்கத்தின் எல்லை
அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது
அவள் இல்லாமல் நம் வாழ்க்கை நகராது
நம்மை பெற்றவளும் பெண் தான்
நம்மை பாதுக்காத்தவளும் பெண் தான்
போற்றுவோம் பெண்ணின் பெருமை
சொல்லிடுவோம் அவளின் அருமை
@Barathi Pratibha
@Kamu pillai Sis
0 Comments