பெயர்: பிரபஞ்சத்தின் காதலி..
VS.. நற்பவி..
தலைப்பு: அன்புக்குரிய ஆசிரியர்களுக்கு..
ஆசிரியர் உலகில் கடைசிவரை மாணவனாகவே இருக்குமொருவர்..
காரணம் கடைசி வரை கற்றுக் கொடுப்பதன் மூலம் கற்றுக்கொள்வதினால்....
மற்றொரு விதத்தில்
அவர் ஒரு குயவர்...
களிமண்ணை பாண்டமாக்குவதனால்...
மற்றொரு விதத்தில் அவர் ஏற்றம் தருவிக்கும் ஏணி..
கற்றலும் கற்பித்தலும் கரை(றை)யற்ற ஈராழி உலகு....
பயிற்சியளித்தல் ...
பயிற்றுவித்தல்...
இரண்டும் சேர்ந்திருப்பினும்
இவற்றினுடனே முரணே
இருதயத்தின் இருக்கத்துள்
இடம்பிடிக்க இடஒதுக்கீடாய் இடைமாறிக்கிறது..
மாணவனின் திண்ணம் நிச்சியம் மதிப்பெண்ணில் இல்லை ...
இம்மனப் புணர் நிகழ்வில்
புரிதலைப் பிறப்பிப்பது...
பாடம் சார்ந்துமட்டுமின்றி,
மாணவனின்
மன(ண)ம் சார்ந்தும்...
இப்புணர்ச்சியின்
விடை(தை)யில்,
தன்னூழியத் திண்ணம்
காணும் ஆசிரியர் இவர்
இறுதி எல்லைவரை
குருதியின் ஊற்றில் ஊறிப்போகிறார்....
என் குருதியின்
ஊற்றில் ஊறிப்போன
என் மனங்கவர்ந்த
என் என்னங்கவர்ந்த
ஆசிரியர்களுக்கு
அவர்தம் ஊழியம் சிறக்க
அவர்தம்தினத்தில்
என் எண்ணிலடங்கா
நன்றிகளோடு வாழ்த்துக்கள்....🙏💐
@sow karthi @Sapna Sis
0 Comments