பெண் என்பவள்
மூன்றாம் இடம்
பெண் என்பவள் அட்சய பாத்திரம் மலரை விடவும் மென்மையானவள் இனிமையானவள் பண்பானவள் குணமானவள்.
இறைவனை ஒருபோதும் நாம் நேரில் கண்டதில்லை ஆனால் நடமாடும் இறைவி அன்னை அவளும் ஒரு பெண் அன்னை இல்லையென்றால் இந்த உலகை காண இயலுமா!
வலி அவமானம் வேதனை துக்கம் ஏளனம் துன்பம் என அனைத்தும் தாங்கிக் கொள்வாள். புன்னகை ஒன்றே அவள் ஆயுதம்.
புன்னகையாலே சரிசெய்து விடுவாள்
கோபம் கொள்ளும் நேரத்தில் அவள் புன்னகையாளே வீழ்த்தி விடுவாள் கவலை கொள்ளும் நேரத்தில் அருகில் அமர்ந்து ஆசுவாசப் படுத்துவாள்
என்னை அழகாய் காண்பிக்க அவள் கொடுக்கும் சிந்தனை வார்த்தைகள் அழகு.என் மீது அவள் வைக்கும் அன்பு அழகு பாசம் அழகு அதனை விட அவள் காதல் அழகிலோ அழகு
அவள் ஆசை கனவுகள் அனைத்தும் எனக்காக மறைத்து வைத்து விடுவாள்! நான் மட்டும் அவள் உலகமென்று என்னை சுற்றிச் சுற்றி வருவாள்!
என் முகத்தில் எப்பொழுதும் புன்னகையுடன் இருக்க அவள் வேதனைகளை மறைத்துக் கொள்வாள் என் வலிகளுக்கு கண்ணீர் சிந்துவாள்!
குழந்தை போன்ற மனம்! குழந்தை போன்ற நடை! குழந்தை போன்ற பேச்சு! என குழந்தையாகவே மாறிப்போவாள்!
காலம் முழுதும் மற்றவரின் தேவைகளுக்கே உழைப்பவள். ஆதவனைப் போல் ஒளி கொடுப்பவள்.எத்தனை சிறப்பம்சம் பெண்ணின்னுள்ளே.
இன்றாவது உணர்ந்து கொள் பெண் என்பவள் யாரென்று! அவளை அலட்சியப்படுத்ததே! ஊதாசினப்படுத்ததே!
ர. ரமேஷ்
திருப்பூர்
0 Comments