*தலைப்பு - அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு*
கீர்த்தனா மணிமாறன்😻
🌈 இன்முகத்துடன் வரவேற்று இன்பமாய் வழிநடத்தி
🌈இல்லறம் போல் அன்பூட்டி அரவணைத்து
🌈இனிதாய் அனைத்தும் கற்றுத்தந்த ஆசிரியர்களே ❗
🌈 அறியா வயதில் உன்னிடம் வந்தடைந்தேன்
🌈 அறத்தையும் , ஆக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தினாய்
🌈 என்னை ஈன்றெடுக்கவில்லை , எனக்கு பயில்வித்தாய்
🌈 உணவு ஊட்டவில்லை , கல்வி கற்பித்தாய்
🌈 ஆரிராரோ பாடவில்லை , ஆயிரக்கணக்கானவற்றை கற்றுத்தந்தாய்
🌈 என்னை கவனிக்கவில்லை , பிறர் கவனிகும்படி செய்தாய்
🌈 ஊரே போற்றும் அளவிற்கு செதுக்கி வடிவமைத்தாய்
🌈 ஆசிரியர் வடிவில் வந்த அன்னையே நீ ❗
🌈 தடுமாறிய நேரங்களில் தாங்கிப் பிடித்து
🌈 தோள் கொடுத்து , தன்னம்பிக்கை ஊட்டி
🌈 கர்வமாய் வாழ கற்றுத்தந்தாய் தகப்பன்போல் ❗
🌈 கல்வி எனும் பெயரில் கரம் பிடித்தாய்
🌈 வெற்றி படிகட்டுகளில் ஏற வைத்தாய்
🌈 வாழ்வின் வெகுதூரம் கூட்டிச் சென்றாய்
🌈 உன் வாழ்வையே அற்பணித்தாய் ஆசிரியராய் ❗
🌈திறமைசாலிகளையும் , சாதனையாளர்களையும் உருவாக்கி உச்சம்தொட வைத்தாய்
🌈 எனினும் சாதாரண மனிதன் போல் மண்ணில் நீ ❗
Insta I'd : tommy_lub_jerry
@Sapna Sis @Kamu pillai Sis
0 Comments