பெயர்: யாதுமானவள்.
இரண்டாம் இடம்
தலைப்பு: பெண்ணியம்.
பெண்ணியம் பேசிட தகுதி எவருக்கும் உண்டோ!
ஆண் பெண் சரிசமம் என்பதெல்லாம் வெறும் வாய்மொழி மட்டுமே!
ஆணுக்கு நிகராய் சகல துறைகளிலும் தன் திறமையை காட்டும் பெண்ணே!
அவனை எதிர்த்து உன் மானத்தை காத்திட துணிந்த பெண்கள் இங்கே எத்தனை!
அவளின் ஆடை விலகலை கூட ஆபாசமாய் பார்க்கும் ஆணின் கண்கள் இங்கே எத்தனை!
தாயிடம் பசியாறிய அங்கம் தாரத்திடம் மஞ்சமாகிய அங்கம் மற்றவளிடம் மட்டும் காமத்தின் பிறப்பிடமோ!
ஆணினமே ஒன்றை உணர்வாய் உடலால் பலவீனமானவள் தான் ஆனால் துணிந்தாள் காளியாய் வதம் செய்திட ஓர் நொடியே அதிகம் தான்!
பிறப்புறுப்பின் வலியையும் மீறி பிரசவிப்பவள்!
ஆணவன் கழுத்தறுத்து மரணத்தையும் பரிசளிப்பாள்!
ஆடவனே பெண்ணியம் பேசுவதால் மட்டுமென்ன பயன் உன் சக தோழன் தவறுறெனினும் ஓங்கியறைந்து சொல் அவள் பூவாக இருக்கிறாள் பூகம்பமாக மாற்றிடாதே என்று!
பெண்ணே பெண்ணியம் பேசி அமைதி கொள்ளாதே, அத்துமீறினால் அறுத்தெரியவும் தயங்காதே!
சட்டம் உனக்கு கைவிலங்கிட்டாலும் இன்னொரு பெண்ணை தொட்டணைக்க எவனும் துணிந்திடுவானோ!
Yathumaanaval_meera.
@Kamu pillai Sis
@Barathi Pratibha
0 Comments