பெயர் : யுவன் K.பாபு
தலைப்பு : தெய்வத்திருமகள்
புது மாற்றம் தந்திடு
புது மாற்றம் தந்திடு
புதுமை பெண்ணென்று
திமிராய் துணிந்திடு
புது சரித்திரச் சிறகுகள் நாங்களென்று நெஞ்சை
வலுவாய் நிமிர்ந்து நின்றிடு ...
போனது போகட்டும்
இழிவுகள் மறையட்டும்
மனக் கவலைகள் ஒழியட்டும்
தலை நிமிர்ந்து வாழும்
காலம் பிறக்கட்டும்...
திரு நங்கைத் தமிழ் மகள் நாங்களடா
தெய்வத் திருமகள்
நாங்களடா
எங்களைப் போல
யாரடா
எங்கள் பிறப்பே என்றும்
தனி சிறப்பு டா...
அலி ,பேடி ,அரவாணி
என்றழைக்கும்
ஆண்களின் கொச்சை
மொழிகளுக்கு
சாதனையால் பதிலடி
திருப்பிக் கொடுப்போம்
விருதுகளாய் வாங்கி
சமூக வலைத்தளங்களில் புகைப்படமாய் பதிவிடுவோம்...
கூந்தலில் சூடும் மல்லிகை பூவாய் மனதளவில் மணப்போம்
மோப்பம் பிடிக்கும் நாய்களை
உரச நினைக்கும் ஆண்
ஆவிகளை விழித் தீயால் எரிமலையாய் சுட்டெரிப்போம்...
ஆண் / பெண் மலரும்
அரசு படிவத்தில்
திருநங்கை மின்னல் மின்னும் அவதாரமும் படைப்போம்
கழிவறை வசதி இல்லையென்றால்
கல் மணலால் மூலை
முடுக்குகளில் தாஜ்மஹாலாய் கட்டியும் குவிப்போம்...
நீயும் ,நானும் மனிதனே
எனக்கும் சம உரிமை உண்டு
இவ்வையகத்திலே
உன்னை விட ஆளும் திறன் என்னிடம் அதிகம் உள்ளதே
நீ மனிதன் என்றால்
நான் சிவன் பாதி சக்தி பாதி கொண்ட இறைவியே .....!!!🔥
@Kamu pillai Sis @Sowbarnika Pratibha @Barathi Pratibha
0 Comments