பெயர்:-ஈ.த.வினோத் குமார்.
பங்கேற்பாளர்
தலைப்பு:-அறிவியல் வளர்ச்சி மக்களின் வீழ்ச்சி.
பசுமையோ காய்ந்த சருகானது.
பழமைகளைத் துறந்து பலமைல்கள் வந்துள்ளோம்...
மரங்களை அழிக்கிறோம்
கரங்களை இழக்கிறோம் என்பதறியாமல்!!..
நீர்நிலைகளை மறைத்தோம்
நீரின்றி யாதுமுண்டோ என்பதைப் புறக்கணித்து...
விண்வெளியின் விந்தைகளைக் கற்றோம்.
விஞ்ஞான வளர்ச்சி என்றோம்!!..
இங்கு இருப்பதும் நிலைப்பதில்லை!!..
இனிவரும் நிலைகளைத் தவிர்ப்பதற்கும் வழியில்லை!!...
வாழ்கிறோம் என்றாலும்...
படிப்படியாய் வீழ்ந்து கொண்டிருக்கிறோம்.!
சுதந்திரமாய் பறந்தாலும்...
கூண்டிலே இருந்தாலும்...
இரண்டுமே ஒன்றுதான்!..
இன்றைய மாயக்கூண்டான கலியுகத்தில்!!..
@saw karthi
@Barathi Pratibha
0 Comments