பெயர் : ப. அன்பரசன்
தலைப்பு : மூன்றாம் பாலினம்
இனம் எனும் இன்னல்களில் சிக்கித் தவிக்கும் இழிவு படுத்தப்பட்ட இன்னோர் இனம் இந்த ஈசல் கூட்டம்
உறவுகளால் அறுத்தெறியப்பட்டு உடலால் வேறு பட்டு உள்ளங்களில் மாறுபட்டு உறவுகளின் நேசத்தை நாடும் நாடோடிக் கூட்டம்
ஆண் பெண் அலங்கரிப்பில் அழகு பார்க்கும் சமூகம் இக்கலவையில் மட்டும் ஆபாசமாய் பார்பதேனோ
உடலுறுப்புக்களில் என்ன உள்ளது அழகு, உள்ளங்களில் வைத்திடும் மதிப்பில் உள்ளது அழகு,
திரைப்படங்களில் கடவுள் பாதி மிருகம் பாதி என்ற கலவையை ரசிக்கிறோம் நடைமுறையில் மனித கலவையை ஒதுக்கி வைக்கிறோம்
உயிர்களை காக்கும் கடவுளான சிவபெருமானே தன்னில் பாதியை மாற்றிக் கொள்ளும் போது ஏற்கிறோம்
பிறப்பால் ஒன்றி கால மாற்றத்தால் தன் நிலை மாறும் இந்த ஈனப்பிறவிகளை மட்டும் ஒதுக்கி வைக்கிறோம்
இயற்கை சீற்றங்களை ஏற்றுக் கொள்ள தெரிந்த சமூகத்திற்கு
இயற்கை மாற்றங்களை ஏற்க கசக்கிறது
பாலூட்டி இனம்(நாய்)யை பாதுகாத்து அடைக்களம் கொடுக்கிறோம்
இன்னோர் பாலினம் என தெரிந்தால் அடித்து விரட்டுகிறோம்
பாலினமோ பறவையினமோ அவைகளும் இம் மண்ணில் பிறந்திட்ட ஓர் உயிர்
அடைக்கலம் கொடுக்கவில்லை என்றாலும் அனாதை ஆக்கி விடாதீர்கள்
Insta I'd : anbu_kavithaigal_
@Barathi Pratibha
0 Comments