பெயர் :அறிவு செவ்வூரான்.
தலைப்பு : அண்ணாவும் பெரியாரும்
முதல் இடம்
@Sowbarnika Pratibha
@Barathi Pratibha
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என சொல்லிய ஆசானே உன்னை போற்றாதோர் யாருண்டு இவ்வுலகில்
பேரறிவு கொண்ட பெருந்தகையே
உன்னை சில நாய்களும் நரிகளும் ஏசுவதுண்டு பொறுத்துக்கொள்க..
பெண் அடிமையாக இருக்கும் காலத்தில் இருந்திருந்தால் உன் பேராற்றல் புரிந்திருக்கும்
வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பெண்கள்
விமானம் ஓட்டுகிறார்கள் என்றால் அது நீ நடத்திய போராட்டத்தின் விளைவே...
ஆரிய சாதி வெறியில் அடிமையாக இருந்தவனே இன்று
உன்னை ஏசுவோருக்கு ஜால்ரா போடுகிறான்
அன்று அவனுக்கும் சேர்த்துத்தான் நீ போராடினாய் நன்றி கெட்ட உலகமடா
பொறுத்துக்கொள்க...
தொட்டாலே தீட்டு என்றான் நான் கட்டிய கோயிலுக்குள் என்னையே நுழைய கூடாது என்றான் அவனுக்கு சொம்பு தூக்குகிறார்கள் சில மூடர்கள்..
பொறுத்துக்கொள்க...
நீ பெண்களை தாசியாக்கவில்லை
பெண்கள் தாசியாக
இருக்கவேண்டும் என்று சொன்ன மனுதர்மத்தை எதிர்த்து போராட்டினாய்...
நீ சிறு வயது பெண்ணை திருமணம் செய்ய ஆலோசனை கேட்டதே உன் உற்ற நண்பர் பக்தவத்சலம் அவர்களிடம்தானே அது தெரியாத சில அல்லக்கைகள் உன்னை ஏசத்தான் செய்வார்கள் பொறுத்துக்கொள்க
பேரறிஞர் அண்ணாவே காலனியில் இருப்பவனும் கழுத்தில் துண்டு போடலாம் என்ற சாதி ஒழிப்பு முறையை கொண்டு வந்ததே நீதானே
அழுக்கு வேட்டி கட்டி அரசாங்கம் நடத்திய
அறிவாளியே உன் ஆங்கிலத்திறமை கண்டு ஆங்கிலேயனே மிரண்ட வரலாறு உண்டு
ஆங்கிலேயன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு காலை நக்கி பிழைத்தவர்களுக்கு எப்படி தெரியும்
பொறுத்துக்கொள்க...
உலகம் வியந்த பொருளாதார அறிஞன் நீ
பாரதி பாட்டிலே சொன்னாலும் என் மாநிலத்திற்கு தாய்மொழியையே பெயராய் தமிழ்நாடு என சட்டம் இயற்றிவன் நீ
அது தெரியாத சில மூடர்கள் உன்னை ஏசுவார்கள் பொறுத்துகொள்க
பேரறிஞர் பெருந்தகையே
ஆயிரம் அரசியல் வாதிகள் இருந்தாலும் உன் இறப்பிற்குத்தானே ஒன்னரை கோடி மக்கள் கூடினார்கள்
உலக கின்னஸ் புத்தகத்தில் இன்றும் பேசப்படுகிறதே இன்றுவரை அதை முறியடிக்க எவனும் பிறக்கவில்லையே
நீ தேசத்துரோகி என்றால் ஏன் இத்தனை கோடி மக்கள் உனக்காக கண்ணீர் விட்டார்கள்
பாவம் வரலாறு தெரியாத பைத்தியகாரர்கள் நீ பொறுத்துக்கொள்க
முத்தமிழறிஞர் கொண்டுவந்த அத்தனை திட்டமும் நீ நினைத்தவையே அதனால் தானே அத்தனை திட்டமும் உன் பெயரிலேயே வந்தது..
உன் பெயர் கொண்ட பல்கலைகழகம் உன் பெயர் கொண்ட ஆசிய கண்டத்தின் தலை சிறந்த நூலகம் இன்னும் இன்னும் எத்தனை நான் சொல்ல
அதெல்லாம் உன்னை ஏசும் ஏசுவோர்க்கு சொம்பு தூக்கும் அறிவீளிகளுக்கு எப்படி தெரியும் நீ பொறுத்துக்கொள்க..
இயக்கம் மட்டுமே இருந்தால் சட்டம் கொண்டு வரமுடியாது
அரசியல் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதற்காக
நீ திராவிட கழகத்தை விட்டு வெளியேறி திராவிட முன்னேற்ற கழகம் என பெயரிட்டு ஆட்சியை பிடித்த அடுத்த நொடியே உன் ஆசான் பெரியாரை தானே சந்தித்தாய்..
மூத்திரப்பையை கையில் பிடித்து கொண்டு மேடையில் பேசி மானமுள்ள மனிதனை உருவாக்கிய பெரியாரே
பெரியாரின் கொள்கையை அப்படியே ஏற்று அதையே சட்டமாக்கிய அண்ணாவே நீங்கள் மட்டும் இல்லையென்றால் இந்தி எப்பவோ நம் மொழியை கொன்று இருக்கும் சாகும் வரை இந்தியை எதிர்த்த பேரறிஞர்களே
உங்களை பற்றி தெரியாத சில அரைவேக்காடுகள் தவறாக பேசலாம் மானத்தோடு வாழும் மனிதர்கள் பேச மாட்டார்கள் பொறுத்துக்கொள்க
அன்று நீங்கள் போராடியதால்தான் இன்று உங்களை விமர்சிக்கும் அளவிற்க்கு பெண்கள் விடுதலை பெற்றுருக்கிறார்கள்
இல்லையேல் இன்னும் அடுப்பாங்
கரைக்குள்ளேயே அரிசி கழுவிக் கொண்டிருக்க வேண்டியதுதான்...
மானமும் அறிவும் மனிதற்கு அழகு...
@@Sowbarnika Pratibha
@Barathi Pratibha
0 Comments