படக்கவிதை போட்டி

பெயர் : யுவன் K.பாபு 

முதலிடம்

தலைப்பு : சிறைப்பட்ட சிறுகுஞ்சு 

மதலையர் ஞாலம் 
எழினியானது 
புலன் மல்லல் 
உலர்ந்து மூளையில் வல்பழியானது 

இயற்கை இகல் 
புலர்தல் ரசனையோ 
வெம்துயரம் கண்டது 
விளையாட்டு நானிலம் பகுவாய் கரைந்து கண்ணீர் தெப்பமாய் துஞ்சமானது 

மண்ணின் சேய் வீரர்கள் இல்லையென்று கலாச்சாரமோ சாதலானது 
திறவோன் திறனும் குதலை மொழி  செல்லாக் காசாய் நலிவுற்றது 

சிட்டுக் குருவி சோரியோ 
சிறை உடைத்து உயிர் கேள்வர் இதமுற வாழ சலமுடன் சிகரம் பறந்தது 
துள்ளி ஆடும் கரவிந்தைகள் 
சோம்பேறி அந்தரமாய் நான்கு கஜம் ஆன்ராய்டு நிருத்தனுக்கு அடிமையானது 

அடம் பிடிக்கும் அழகு குட்டி மஞ்ஞைகளுக்கு 
நிலாவை பார்த்து
கதை சொல்லிப் பழகு 
நிகழ்படம் காண்பித்து கதை சொல்வதை நீக்கு 

வினை எரி ஊழியின் துவக்கம் இணையதள விளையாட்டு  
வரலாறு படைக்கும் இளையவர்களின் 
கனவை ஊனம் செய்யும் செல்பேசி ஊழிக்காலத் திருட்டு🤲

@⁨sow karthi⁩ @⁨🔥பாரதி பாஸ்கி✍⁩

0 Comments