பெண்ணியம்

தலைப்பு : 

*பெண்ணியம்*

முதலிடம்

இங்கு பலரது பூகம்பங்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றன...//

பலரது பூகம்பங்கள்
மறக்கப்பட்டு இருக்கின்றன..//

பலரது பூகம்பங்கள் 
பூக்களாய் மாறி இருக்கின்றன..//

பெண் என்ற வார்த்தையின் முடிவில் பலரின் வாழ்க்கையின் வழி(லி)கள் இருக்கின்றன...//

பிறந்த நிமிடத்தில் 
பூக்களாய் சிரித்தவள்..//

வளர வளர 
பூகம்பமாய் எரிந்திருக்கிறாள்...//

சமையற் கட்டினுள் பூவாய் இருப்பவள்..,
சில சமயங்களில் பூகம்பமாய் வெடித்திருக்கிறாள்...//

கொஞ்சி பேசும் போது பூவாய் இருந்தவள்..,
கோபத்தின் போது பூகம்பமாய் வெடித்திருக்கிறாள்...//

அள்ளி அணைக்கும் போது 
பூவாய் இருந்தவள்..,
அதட்டி பேசும் போது பூகம்பமாய் வெடித்திருக்கிறாள்..//

ஆம் அவளே பெண்.....

சீறும் பாம்பை போல் 
சினுசினுக்கும் அவள்தான்..,
சின்ன சின்ன விஷயங்களில் 
சுருண்டு போகிறாள்..//

ஆயிரம் பிரச்சனைகளுக்கு 
அடித்தளம் போடுவதும் அவள்தான்....,
ஆனால்
தன் ஆசைகளை அமைதியாய் 
மறைத்து விடுகிறாள்..//

ஏனென்றால்

அவள் பெண்.....

என்றுமே பெண் பூகம்பமல்ல....,

ஆனால்

 என்றுமே அவள் பூக்கள்.....//

நன்றி

தேடல் மணி
நாமக்கல் மாவட்டம்

@⁨Barathi Pratibha⁩ @⁨Kamu pillai Sis⁩

0 Comments