தலைப்பு:" அன்பிற்குரிய ஆரிசியர்களே"
ஒரு குழந்தை பிறந்தும் அவளது முதல் தாயை காண்கிறாள்......
ஆனால் அவளுக்கு இன்னொரு தாயும் இருக்கிறாள்.....
அவள் பிறந்து இந்த புவியில் அவள் பாதம் வைக்க அவள் முதல் தாய் காரணம் .....
ஆனால் அவள் முழுமையாகவும் தெளிவாகவும் திறமையாகவும் பேச கற்றுகொடுத்தவர்கள் ஆசிரியர்கள்.....
பிறகு அவள் தாயின் அரவணைப்பில் இருப்பதை விட ஆசிரியரின் அரவணைப்பில் இருக்கிறாள்.........
நல்லவை கெட்டவைகளை எடுத்துக்கூறி நல்வழிக்கு கூட்டிச்செல்லும் இன்னொரு தாய் ஆசிரியர்கள்........
நீ சோகமாக இருக்கும் போது உன்னை தட்டி எழுப்பி புதிய பாதைக்கு கொண்டு செல்வார்கள் ஆசிரியர்கள்........
பிறகு பல தகவல்களை கற்றுக்கொடுத்து எங்களை ஏற்றி விட்டு நீங்கள் தாழ்ந்து இருப்பீர்கள்...........
படிப்பு என்றாலே நினைவிற்க்கு வருபவர்கள் நீங்கள் தான்... ஆசிரியர்களே.......
நாங்கள் முன்னேற வேண்டும் என நீங்கள் பாடுபடுவீர்கள்......
உங்கள் சோகங்களை எல்லாம் மறைத்து எங்களிடம் அன்பை கொட்டுவீர்..........
உங்களால் தான் இன்று பல சாதனை பூக்கள் மலர்ந்து இருக்கின்றன.........
நீங்கள் இல்லை என்றால் இது சாத்தியமில்லை........
என்றென்றும் முன் உதாரணமாய் நீங்கள்.....
ஆசிரியர்கள்.....
நன்றி 🙏🙏🙏🙏
ரெ.சௌந்தர்யா
, திருச்சி.
0 Comments