#மாதவன் கவிச்சிதறல்#
பங்கேற்பாளர்
கூண்டினுள் உலகம் :
தொலை பேசியில் தொலைந்ததடா உலகம்,
தொந்தரவு தந்தாலிங்கே கழகம்,
ஏட்டு எடுத்து எழுதிய நாள் எங்கே?
ஏறில் நின்று உழுத நாள் எங்கே..?
அடைபட்டு கிடக்கிறோமே தொ(ல்)லை பேசிக்குள்..
எப்படி வருவோம்..?
எதிர்ப்பு வினை எனக்கு மட்டுமா..?
எட்டிப்பார்க்கும் என் செல்ல குருவிக்கும்தான்..
பறந்த அதுவும் பரிதவிப்பது என்னவோ இத்தொலைபேசி அலையால் தான்..
காதில் மாட்டும் கருவி செவிடனாக்கி, பார்க்கும் கண்ணும் குருடனாக்கி, பேசும் வாயும் ஊமையாக்கி, கடைசியில் என்னை கூண்டிலிட்டு கிறுக்கனாக்குகிறது..
மழலையை மறந்த உலகம் மயங்கி கிடப்பதேனோ இச்சவபெட்டிக்குள்..??😢
Instagram ; kavi_chidharal_1996
0 Comments