படக் கவிதை போட்டி

தலைப்பு: கையடக்க கைப்பேசி கைதி

முதலிடம்

சிறைப்பட்ட கைதியானேன்!!! 

சில நிமிடம் உன்னை கண்டு! 

பல கணங்கள் போகும் என்று அறியாமல்;

 பறவையாய் பறந்த எண்ணம்!! 

பத்து பகிரி குழுவினில் முடங்கியது ஏனோ!!!

 முகம் பார்த்து பழகி உள்ளங்களை மறந்து! 

முகநூல் நட்புகள் நிறைந்தது ஏனோ!!! 

கிசுகிசு பேசி மகிழ்ந்த நட்புகளை!!

 கீச்சகம் பார்த்து அறிவது ஏனோ!!!! 

வானலாவிய சிந்தனை கிற்றை!!! 

வலையொளி முடக்கியது ஏனோ!!! 


வேர்வை சிந்த வீதி விளையாடிய கால்கள்!! 

விரல் பொத்தானை அழுத்தி விளையாடும் விதியோனோ!!!!! 


வளர்ச்சியெனும் மோகம் கொண்டு!!! 

வளர்பருவம் இழத்தல் தீங்கு!!!

மீண்டுவிடும் ஆற்றல் கொண்டு! மீட்சி பெற வேண்டும் மூலை!!!  

கையடக்க கைப்பேசி உறவை!!!! காலத்திற்கு ஏற்ப பயன்படுத்தல் போதும்!!!!


இளையகவி மணிகண்டன் தண்டபானி


படவரி முகவரி: Mani_yaso666


@⁨Barathi Pratibha⁩ @sapna

0 Comments