பெண்ணியம்

பெயர் : சங்கவி சகி

பங்கேற்பாளர்

தலைப்பு : கன்னிப் பெண்ணின் திருமண கனவு

மணவாளனாக நீயும் //
மணவாட்டியாக நானும் //
உதயவனின் சாட்சியாக //
அனைவரின் முன்னிலையில் //
இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டிருக்க //

மங்கள இசை முழங்கி //
மந்திர வார்த்தைகள் உச்சரித்திட //
உதிர்ந்த மலரோடு வல்சி தூவிட //

இரு கைகளால் தோள் தொட்டு //
பிரம்ம நேரத்தில் கட்டிய மஞ்சள் கயிறு //
நெஞ்சினை தொட்டு தாலாட்டிட //

உமது விரலால் சிவப்பு நிற //
குங்குமம் நெற்றியில் சூட்டிட //
என்னில் சரிபாதியானவள் நீ //
என்று பாதங்களைத் தொட்டு //
மெட்டியை பரிசாக தந்திட //

எந்நிலையிலும் உனை கை //
விடமாட்டேன் என்று விரல் //
கோர்த்துக்கொண்டு - அக்னி //
இராஜனை வலம் வந்து //
துணைவியாக ஏற்றுக்கொள்ளும் //
நாளுக்காக மாங்கல்ய வரம் நீ என்றே //
வேண்டி காத்திருக்கிறேன் !!

@⁨Sowbarnika Pratibha⁩ @⁨Barathi Pratibha⁩

0 Comments