தலைப்பு: அன்பிற்குரிய ஆசிரியர்களே.
பெயர்: யாதுமானவள் மீரா.
தாயின் அன்பையும் தந்தையின் கண்டிப்பையும் ஒருமுகமாய் வெளிப்படுத்தும் ஆசிரியரே!
மீண்டும் கிடைத்திடா சிம்மாசனத்தில் நீங்காது வீற்றிருக்கும் ஆசிரியரே!
கருவில் சுமக்காது கருத்தில் சுமக்கிறாய் ஆயிரமாயிரம் பிள்ளைகளை ஓர் ஆசிரியராக!
எப்போதும் மழலையோடு மழலையாய் என்றும் இளமையுடன் இருக்கும் ஆசிரியர்களே!
பாடங்களை மனப்பாடம் செய்யாது காட்சிகளாய் பதிய வைத்தாய் திறமையான ஆசிரியராக!
சொற்சுவையுடன் பொருட்சுவையையும் உணரச் செய்தாய் உணர்வின் வெளிப்பாடுடன்!
பிரம்பில் நீ அடித்தாலும் இன்று என் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்ளும் ஆசிரியரே!
உன் பாதை எது என்பதை உணரச் செய்து உன்னை மேன்மையடைய செய்வார் நல்லாசிரியராக!
உன்னிடம் பாடங்களன்றி பகுத்தறிவையும் கற்றுக்கொண்டேன்!
தவறை திருத்தி தன்னம்பிக்கையை விதைப்பாள் தாயாய்!
கருத்துக்கள் புகட்டி தைரியம் விதைப்பாள் தந்தையாய்!
வாழ்வில் வெற்றி பெற நல்வழி காட்டும் ஓர் வழிகாட்டியாய்!
நல்லது அல்லது உணர்த்தி உலகறியச் செய்தாய் இறைவனாய்!
கற்பிப்பவரின் கற்பித்தலுக்கும் ஓய்வில்லை,
கற்கப்படும் அறிவுக்கும் எல்லையில்லை!
கல்வியோடு கலைகளையும் வாழ்வியலையும் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு என்றும் எம்முதல் தலைவணக்கம்!
Yathumaanaval_meera.
0 Comments