பெண்ணியம்

பெயர் : அல்லல்களின் அரிவை அம்மு.

முதலிடம்
தலைப்பு : பெண் எனும் நான்..

பெற்றெடுக்க அன்னை வேண்டும்.. பெற்றுக்கொடுக்க தாரம் வேண்டும்.. பெறுவது மட்டும் அரிவை என்றால் அழித்துவிடுவது நீயாமா?...

 காலம் கடந்து கருவுற்றாள்  கருப்பையில் நானிருந்தேன்...

 பெண்ணென அங்கே தெரிந்த பின்னே.. பிஞ்சு என பாராது நஞ்சை திணித்தாய்..!!

 நஞ்சு தனை மிஞ்சியே நான் வளர்ந்தேன்.....

 பத்து மாதங்கள் அவள் என்னை சுமக்க 
பாரம் என நீ நினைத்தாய்....

 பிறந்தேன் நானும் பெண்ணெனவே ....!!

தாய் பாலின் சுவை நான் அறிந்திடும் முன்னே தந்தாய் நீ கள்ளிப்பாலின் சுவை..!!

 விஷம் என அறியாது 
விரும்பி உண்டேன்..!! உன்" மனம்"விஷம் என அறியாது....

 எத்தனையோ அல்லல்களை கடந்துவந்தேன்  அகவையில் அழகானேன் அம்மா அப்பா என்று நானும் எழுதிட ஏட்டுக்கல்வி வேண்டும் என்றேன்...!!

 என்னை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்து எச்சில் பன்னீரை என் மீது தெளித்தாய்...!!

"கல்வி' கற்க வேண்டியது பாடசாலை ...
"களவி"யை கற்றுக் கொடுத்து பரிசையாய் கொடுத்தது  சாலையில் பாடை.... 
பச்சிளம் என்றும் பார்க்கவில்லை பருவச்சி என்றும் பார்ப்பதில்லை எத்தனை நகக்கீறல் எத்தனை கூக்குரல் எதுவும் பயன் இல்லை ..!!

குழந்தை நான்  என்றேன்..
 எனக்கு குழந்தை வேணும் என்று அரங்கேற்றம் ஆனது இங்கே "குழந்தைத் திருமணம்"....!!


வயது  முதிர்ந்து போனதாம்...
"முதிர்கன்னி" என்றார்கள் ...காரணம்  நானல்ல வசதியில்லாத ஆண்மகனின் "வரதட்சனை" .....!!!

கோவில் குளம் சென்று விட்டேன் குறையெல்லாம் அவன் மீது பட்டம் கொடுத்தான் எனக்கு "மலடி" என்று....!!!

 அல்லல் ஆயிரம்  கண்டேன்...
 அவதாரம் கொண்டேன் "காளி" என.... 

எனை தீண்டுவோரை எல்லாம் தின்று செரிக்க...
 தீயினில் கொண்டு பொசுக்க...
 வந்தேன் நானும் மறு உருவாய் ...

நானும் பெண்

@⁨Barathi Pratibha⁩ 
@⁨Sowbarnika Pratibha⁩

0 Comments