தெய்வ திருமகள்(ன்)

பெயர்: இதயத்தின் தாரகை 

(கு.ஜனனி) 

அவினாசி
திருப்பூர்

தலைப்பு : அன்புச் சிறகே... !

தந்தையின் பாதியையும்
தாயின் மீதியையும் 
உணர்வில் மட்டுமல்ல 
உடலிலும் கொண்டவர்கள் இவர்கள் !
ஆணாகப் பிறந்தும் 
ஆணாதிக்க சமுதாயத்தில் 
அடியோடு ஒதுக்கப்படுகிறார்கள் 
பெண்ணாக வளர்ந்ததனால் !
காரணமில்லா வெறுப்புகளால் இவர்களை
காரணமின்றி 
வெறுக்கின்றனர்
விதியின் சதியால் !
ஆறுதல் கூறவும் ஆளில்லை
மாறுதல் உடலில் 
ஏற்பட்ட காரணத்தால் ! 
சுதந்திரப் பறவையாக 
சுதந்திரமாகப் பறக்க நினைத்தும் 
கூண்டுக் கிளியாகிறார்கள் !
மினிமினிப்பூச்சியாக மடிகிறாள்
மாறாத சமூகத்தின் பார்வையால் !
வழிதேடும் இவர்களுக்கு 
இறுதியில் மிஞ்சும்
வலிகள் மட்டும் ஏனோ ?
இதிகாசங்கள் பல உரைத்த ஞானிகளும் 
சொல்ல மறந்த கதையோ இவர்கள் !
வழிதேடும் பறவைக்கு 
வலிதராமல் இருப்போமே !
மலரே....
ஆணும் பெண்ணும் சமமென்ற
ஆறுதல் தேடும் வாழ்வில்
ஆணும் பெண்ணும் கலந்தே
அன்புக்காக ஏங்கும் நீ
அழியாத பொக்கிஷமே !
வெட்கப்பட வேண்டியது
மாற்றம் கண்ட நீயில்லை
மாற்றம் காண முயலாத
மானுட மனங்களே !
மானுடனே...புரிந்துகொள் !
பெண்னென்னும் சக்தியை
பாதியிலே பெற்று
பெருமிதத்தோடு மீதி வாழ்வை 
வாழ்பவள் அவளென்பதை !
சிகப்பு விளக்கு மட்டுமே 
சித்தரிக்கப்பட்ட அவள் வாழ்வை
சீர்திருத்தவே பச்சைக் கொடிகளை
அன்போடு தருவோமே !
தெய்வத்தின் திருமகளே !
வாழ்வு என்னும்
தொடர்கதையின் மருமகளே !
மனிதா  மாறவேண்டியது 
கைதட்டி காசுகேட்கும் அவர்களல்ல
கைகோர்க்க தடைவிதிக்கும் நீயே !
சமுகமே ! தெளிந்துகொள் !
சமுகத்தின் தேவதைகள் இவர்கள்
சரித்திரம் படைப்போம் இவர்களோடு சேர்ந்தே
நாளைய விடியலை நோக்கியே !
மங்கையவள் மதிக்கப்படவே
மாற்றம் இங்கே தொடங்கட்டும்... !
அன்புச் சிறகே....எழுந்து வா !
ஒருபோதும் மறவாதே
ஆயிரம் பேர் அருகிலே
ஆயிரத்தில் ஒன்றாக
படைக்கப்பட்ட நீ 
அன்பைக் காட்டும்
அக்னிச்சிறகு என்பதை... !
                   
Insta I'd babyma_091026

@⁨Kamu pillai Sis⁩ @⁨Sowbarnika Pratibha⁩ @⁨Barathi Pratibha⁩

0 Comments