பெண்ணியம் :
மூன்றாம் இடம்
சங்கட்டங்கள் விலகி
சாதனைகளை பதிக்கும் காலத்தில் பெண்ணுலகம்..
மெல்லியவள் என கூறிய வாய்களும் மெல்ல நகர்கிறது சாடை பேச்சுக்களிலிருந்து..
வீட்டை விட்டு வெளியேற மறுத்த சமூகம், இன்று நாட்டை விட்டு செல்ல நா அசைக்கிறது..
புலவர்களில் விரல் எண்ணும் அளவிலிருந்த மகளிரில், இன்றோ
இக்கவிக்குழுவில் கூட மகளிரே அதிக எண்ணிக்கையில்..
முடியாது என்பதையெல்லாம் முடித்து, முடிவு கட்டிக்கொண்டிருக்கிறாள் அவள் கொண்ட வேட்கையால்..
பெண்ணியம் பேச பல நாடுகள் இருக்க,
பெண்ணியம் பேராபத்தில் இன்று, தாலிபான்கள் நாட்டில்,
மீண்டும் சரிந்தது அந்நாடு பெண்ணியத்தில்..
வெளியில் வர தடை,
பல ரக உடை அணிய தடை,
விளையாட்டில் தடை,
பெண்கள் படிக்கவும் தடை..
பேணி காப்பது உலக நாடுகள் கையில்,
பேரன்பு மட்டுமே நம் கையில்,
கற்பழிப்பு நம் நாட்டில் தினசரி செய்தி,
காமம் தலைக்கேறியவனின் தாண்டவம், குழந்தைகளின் மீதும்..
போக்ஸோ சட்டங்கள் போதாது,
தண்டனைகளை கடுமையாக்கு,
பெண்மையையும் தார்மீகம் ஆக்கு....
- மாதவன் கவிச்சிதறல்
@Kamu pillai Sis @Sowbarnika Pratibha
0 Comments