என் பார்வையில் எதிர்கால இந்தியா"

பெயர்:
   "பிரபஞ்சத்தின் காதலி"
         VS.. நற்பவி..

இரண்டாம் இடம்

தலைப்பு:
 "என் பார்வையில் எதிர்கால இந்தியா"

"எங்கே தேடுவேன் 
என் தேசத்தை
தொலைந்தது 
தேசம் மட்டுமல்ல 
நம் நாட்டின் 
வளங்களும் தான்...

ஒளிரும் இந்தியா 
ஓசையில்லாமல் 
கொள்ளை போனது...

காதல் வாழ்க்கை
 கணினி மையமானது
ஒருவனுக்கு ஒருத்தி
இங்கே உத்தமம் இல்லை
ஏமாற்றமே வளர்ச்சி
 என வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம்...

ஓட்டுக்கு விலைபோன
வேடிக்கை மனிதர்கள் 
தானே நாம்....!
வேடிக்கை பார்க்கவும்
 சில கூட்டங்கள் உள்ளது ...
குடியால்  குடித்தனத்தை 
இழக்கும் குடி மகன்கள் 
நாட்டின் சீர்கேடு...

சில்லரைக்காக பெண்களை மணமுடிக்கும் இந்த நாட்டை என்னவென்று அழைப்பது
இது நாட்டின் வறுமையா
அல்லது கொடுமையா
கூறினால் வெட்கக்கேடு...

வெட்டிவேர் போல் 
குழியை வெட்டுகிறான்
மனிதகுலத்தை உயிரோடு புதைக்கிறான்...
இருக்கும் காலங்களில் 
வாழத் தெரியாதவன் எதிர்காலத்துக்கு 
உழைக்கிறான் 
இது என்ன நிலையோ....

மக்களிடம் ஈன இரக்கமின்றி
விலைவாசியை உயர்த்தி
 விட்டு லஞ்சம்களை வாங்கி குவிக்கும் தலைவர்களா எதிர்காலத்தில் நாட்டை 
வல்லரசு நாடாக மாற்றி 
அமைக்கப் போகிறார்கள்...!!!

வறுமையில் செத்தவன்
 பல்லாயிரம் 
மரணங்கள் புரியாதா
இந்த தேசத்தை 
ஆளுபவனுக்கு 
நாங்கள் ஏழ்மையாக 
 பிறந்ததால் எங்களை
 விலைபேச
நினைக்கிறான்...

என் தேசத்தின் 
நிதிஅமைச்சரைப் 
பார்த்து கேட்கிறேன்...
 மாதம் ஆயிரம் ரூபாய்
 போதுமா எங்கள்
வாழ்வாதாரத்தை போக்க ...
வறுமைக்கு வழிச்செய்தாயோ அன்று...

ஆயிரம், ஐநூறு செல்லாது 
இரண்டாயிரம் அறிமுகம் 
இன்று இரண்டாயிரம் 
போனயிடம் தெரியவில்லை
நாட்டை ஆண்டவனுக்கு பணம் எங்கு பதுக்கள் நடந்தது தெரியாது..

இருப்பவன் எல்லாம் இருப்பவனாகவே
 வாழ்கிறான் .
இல்லாதவன் எல்லாம் இல்லாதவனாகவே 
வாழ்கிறான்.
அப்படி என்றால்
உங்கள் நிர்வாகம் சரியில்லையா
 மக்களின் வாழ்வியல் 
முறை மாறுபடுகிறதா
 இதில் ஊருக்கு ஒரு கட்சி....

மக்களை கெடுக்க
 சாதி வன்மங்கள்
எத்தனை எத்தனை 
அவமதிப்பு அவமானங்கள்
 மக்களை ஏமாற்ற 
மத சடங்குகள் 
இதற்கெல்லாம்
 இந்த அரசு 
பதில் சொல்ல வேண்டும்...

இந்தியாவின் 
முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக 
இருப்பது படிப்பறிவின்மை..
நான் பெற்ற செல்வம்
 குறையாத செல்வம் 
என்று சொன்னால் 
அது கல்வி ஒன்றாகத்தான் 
இருக்க முடியும்...

தொட்டனைத்தூறும் மணற்கேணி போல் தோண்டத் தோண்டப் பெருக்கெடுக்கும் வல்லமை படைத்தது படிப்பறிவு ஒன்றுதான்...

இந்தியாவின் வளர்ச்சியை மாணவர்களின் கையில்தான்..
மாணவன் என்றால்
"மாண்+அவன்" 
என்று பிரிக்கலாம்
மாண் என்றால் பொறுமை
மாணவன் என்றால் பெருமைக்குரியவன் 
மாண்புடையவன் 
என்று சொல்வார்கள்....

இன்றைய மாணவர்கள்தான்
இந்தியாவின் எதிர்காலம்
ஏனெனில் ,மாணவர்கள்
எவ்வாறு அமைகிறார்களோ
அந்த வகையில்தான் 
இந்தியா செல்கிறது.

இங்கு யாரும் யாருக்காக 
வாழ தயாராக இல்லை 
அப்படி என்றால் 
இந்த தேசம் எங்கு 
செல்லும் வருங்காலத்தில் நிலைதான் என்னவாகும்...

ரோடு போடுகிறேன் 
என்ற பெயரில் 
பணத்தை சுருட்டுகிறான்.
பாலம் கட்டுகிறேன் 
என்ற பெயரில் 
நிலத்தை வாங்கி சேர்கிறான்...
ஏழை மக்களுக்கு 
இலவச வீடு கட்டுகிறேன் 
என்ற பெயரில் குளங்களையும் ,
ஏரிகளையும் அளிக்கிறான்...

எவன் வீட்டு பணத்தில் 
 எவனுக்கு சிலை வைக்கிறாய்...
சிகரமே சரிந்தாலும் 
தேசத்தை நினைத்து 
அஞ்சாத தேசத்துரோகிகள்
 வாழும் தேசமடா இது....

இந்த நாட்டிலுள்ள MP. MLA சொத்துக்களை கைப்பற்றி மக்களுக்கு கொடுத்தாலே
ஒரு தலைமுறை
தாண்டி வாழலாம்
எத்தனை எத்தனை தலைவர்
இந்த தேசத்திற்காக வாழ்ந்து உயிரிழந்தார்கள் அவர்களின் குடும்பங்கள் பசி
 பட்டினி என தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறது....

இந்திய தேசமே 
எங்கே போகிறாய்
பசியின் நாட்கள்
பரதேசி வாழ்க்கை
படைத்தவனின் விதியா
ஆள்பவனின் சூழ்ச்சியா
உலகம் தெரியவில்லையா
ஓரம் கட்டப்பட்டவனா..

வீதியெங்கும் மது கடை
மகிழ்ச்சியில் அரசியல்வாதி
ஆண்டவனே நினைத்தாலும்
மாறாத வாழ்வாதாரம்
மயங்கியது மனங்கள்
எரிந்தது பிணங்கள்..

படிக்காதவன் பல்கலைக்கழக உரிமையாளர் இங்கே
சாராய வியாபாரிக்கு 
முனைவர் பட்டம்
சல்லிதனம் இங்கே
கயவர்களின் காமகொடுமை
பொள்ளாச்சி முதல் புதுடெல்லி வரை 
எவன் கேட்பான்
இளிச்சவாயனை கொள்ளும் காவல்துறை என் நாட்டில்..

நீதித்துறை நியாயங்கள் 
விற்கும் தானதர்மகூடம்
ஆளுபவனின் ஆதரவாளங்கள்
இவர்கள் பணி
உயிருடன் ரத்தம் குடிக்கும் 
கயவர் கூட்டம்
வளரும் நாடா வளர்ந்த நாடா
புரியவில்லை எமக்கு..

ஏழையாகப் பிறந்து 
ஏழையாக இறக்கும் 
ஒரே நாடு
என் இந்திய தேசம் தான்
 இங்கே கேள்வி கேட்டா
 கோமாளி என பட்டம்
இல்லாவிட்டால் கொன்று குவிப்பார்கள்
ஏன் பிறந்தோம் இங்கே 
என தோன்றுகிறது
மாறுமா என் தேசம்
வாழுமா  ஜனநாயகம்...

கொஞ்சம் கொஞ்சமாக 
தேசத்தின் வளர்ச்சியும் 
மண்ணாகிப் போகிறது
இந்தியாவின் எதிர்காலம்
எரிந்து மடிகிறது
எதை நோக்கி செல்கிறோம் ஒன்றும் புரியவில்லை....😔

@⁨Sowbarnika Pratibha⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments