என் பார்வையில் எதிர்கால இந்தியா

என் பார்வையில் எதிர்கால இந்தியா :
இரண்டாம் இடம்
இந்தியா என்ற பெயரும் சற்று இணக்கமற்றே இணைகிறது நா(டு)ள் நகரும் திசைகளில்..

அப்துல் கலாம் நினைத்த 2020 யும் கடந்து விட்டோம்,

விவேகானந்தர் எண்ணிய இளைஞர்களையும் தொலைத்து விட்டோம்,

வாழும் நாட்டிற்கு வாழ்த்துக்கள் போதும் என ஒதுங்கும் சமூகம்,

வளர்ச்சி தான் நம் நாட்டிற்கு, மனிதம் அழிந்து வருவதில்..

வாழும் மனிதனுக்கு உணவில்லை என பட்டியல் சொல்ல, 
வான் நோக்கிய சிலைகளும், வாயை பிளக்கும் மைதானங்களும்
அவசியம் தானா..?

அழிவை அழைக்கும் நம் நாடு, ஒப்பந்தம் செய்கிறது மற்ற நாடுகளுடன்,
தொழில் நுட்பம் வளரும் என்ற தொலைநோக்கு பார்வையில்..

இயற்கையை காக்க திட்டங்கள் இல்லை நம் நாட்டின் நிதி நிலை அறிக்கையில்..

என்ன வைக்க போகிறோம் வரும் நம் சந்ததிகளுக்கு..?
சுவாசிக்க முடியா காற்று,
குடிக்க இயலா குடிநீர்,
வசிக்க இயலா நிலம்,

பணம் இருந்தும்
மனம் வருந்தும் செயல்கள் தான் நம்மை சுற்றி..

திட்டங்கள் என்று திருட்டில் அரசியல்,
பட்டம் என்று படிப்பில் விரிசல்கள்,
ஊறிய ஊழலால் உருவமிழக்கும் நம் நாடு..
உருப் பெருவது எப்போது??

பல பாஷைகள், மதங்கள், இனம், சாதி, கலாச்சாரம் என வேறுபட்டாலும்,
ஜனநாயகம் என்ற கூற்றில்
ஜனனம் ஆகும் நம் நாடு,
சர்வாதிகாரம் ஒழிந்து,
சமரச நாடென ஆகட்டும்,
தெளிந்த நீரில் கலந்த விசமாய் விரிசல் பரவாது,
நலிந்தோறும் நல்வாழும் நாடாக நம் நாடு உருமாற பேராசையே..
என் பார்வையில் எதிர்கால இந்தியா..

   - மாதவன் கவிச்சிதறல்..# 

@⁨Sapna Sis⁩ @⁨Kamu pillai Sis⁩

0 Comments