பெயர் : நிதர்சண கவிஞன் ரஹ்மான்
இரண்டாம் இடம்
தலைப்பு : *பெதும்பையின் பயம்*
🥀ஆழியின் ஆழம் உணர்ந்தோர் நீரோ...,,
🥀கோதையவள் உள்ரகசியம் காணா-போனதேனோ...,,
🥀அகிலம் கண்ட புதுமையின் நல்லாளே...!!
🥀கருப்பை தங்கமுலாம் பூசிட்ட தேவையதையவள்...!!!
🥀புன்முறுவலோடு சிறகடித்து பறந்திடும் பாவையவள்
🥀நடுநிசி இரவுகள் தேடிடும் பசியினை..,,,
🥀மாக்களோடு போராடி காத்திடும் பெண்மை....???
🥀காதல் பெயரிட்ட காயகனும் உண்டோ..!!
🥀பெண்மை காத்திட ஓடிடு நீயும்...
🥀பெண்ணியம் பேசிட்ட பெரியரெனும் நல்லோரே....!!!!
🥀பெண்கவிதை பாடிட்ட தூவல் கவியோனே...!!!
🥀தெரிவை குணமெடுத்து பாட்டுரைத்தீர் நீயும்..
🥀அவள் வீரமுழக்கமிட மறந்து போனாயோ.....!!!
🥀நித்திரை தூக்கமில்லா தவித்திடும் பெண்ணியம்...
🥀சமஉரிமை வேண்டி எடுத்தெறியும் வேலிகளை,,,
🥀அடுப்பாங்கரை தாண்டி எட்டட்டும் உச்சம்
🥀மங்கையவள் சிகரம் தொட்டு சிரக்ட்டும்....
🥀தொடுவானில் ஜொலிக்கட்டும் எறிகற்கலாய் நாளும்...
🥀தொட்டுவிட நினைத்தோனும் எறிந்து பொசுங்கிட....
🥀சுவாலையாய் சுடர்விட்டு எறிந்திடு பெண்ணே.....!!!!!
@Sowbarnika Pratibha @Barathi Pratibha
0 Comments