பெயர்:
(யுவன் K. பாபு)
இரண்டாம் இடம்
தலைப்பு:
" பெண்ணியம்"
*************************
பெண்கள் ஓர் பார்வதி .....!
இவள் சிரித்தாள் ஓர் பூவிழி ...!
கருவறை ஒன்றே அழகிய
ஆலயம்...
பெண் இனமே என்றும்
கவியாலயம்..
பெண்களின் மார்புகளை
கண்டால் ஆர்ப்பரிக்கும்
எண்ணத்தை விதைக்காதே...
உன் தாயிடம் குழந்தை
பருவத்தில் பசிக்காக ஏங்கிய
அன்பின் அடையாளம்
என்று விதைத்துவிடு....
தன் இரத்ததையே உயிராக பிசைந்து தேன் ஊற்றாக
ஊற்றி ஊட்டி வளர்த்தவள்...
ஹேய் ...!
வெறி பிடித்த மானிடா...
பெண்களின் யோனி தீராத
திமிரை திணிப்பதற்கு அல்ல...
"பெண்மை என்னும்
தாய்மையை படைப்பதற்கு"
இங்கு காமம் என்னும் கண்ணோட்டத்தில் காயப்படுத்தாதே...
"அன்பு என்னும் கவிதையால் கௌரவப்படுத்து"
காரணம்...!
உன் தாயிக்கு தெரியும் இவ்விடம் எவ்வலி கொண்டதென்று...
உன் மனைவிக்கே தெரியும் இவ்விடம் எப்புனிதமானதென்று...
ஹேய் !
கட்டில் சுகத்திற்கு மட்டும்
இவளிடம் கொஞ்சிப் பேசாதே...
ஹேய் !
கர்வம் கொண்ட ஆண்களே...!
பெண்கள் என்னும் பருவத்தை மட்டும் ருசிப்பதற்கு வெட்கமே இல்லாமல் இவளிடம்
கெஞ்சி கூத்தாடுவாய்...
இவளின் உடல் நிலை
சரியில்லாத காலத்தில்...
கழிவறைக்கு சென்று சேவகம் செய்ய ஏன் மறுக்கிறாய் .... ?
ஆகையால்...
பெண்களை
பெண்களாகப் பாருங்கள்...
உங்கள்
தேவைகளுக்கு உபயோகப்படுத்தும் இயந்திரமாக பார்க்காதீர்கள்...
பெண் நலம் காப்போம் ....!
பெண்மையை போற்றுவோம் ...!
@sow karthi @🔥பாரதி பாஸ்கி✍
0 Comments