அண்ணாவும் பெரியாரும்

பெயர் : அல்லல்களின் அரிவை அம்மு.

மூன்றாம் இடம்

தலைப்பு : கருமை வெண்மை

சமுதாயத்தை சீர் திருத்திடவந்த சக்தி அவர்.... 

"சாதி "என்னும் பேயை ஓட்டிட வந்த மாமேதை அவர்... 

"தீண்டாமையை "அழித்திட வந்த தீக்குச்சி அவர்... 

"மூட நம்பிக்கை"யால் மூலையை இழந்தோருக்கு அறிவை புகட்டியவர்... 

இறைவனே என்றாலும் அனைவரும் ஒன்று என்றவர்... 

"பெண்" என்பவள் பேதையல்ல மாமேதை என்பதை உணர்த்திட பெண் விடுதலையை விரும்பியவர்... 

பழி வாங்கும் குணம் வேண்டாம் பகுத்தறிவோம் என்று பண்பாட்டை விளக்கியவர்...!! 

வண்ணங்களால் வேறுபாடு வேண்டாம் என்று வேரோடு பிடிங்கி எறிந்தவர்...!! 

இறைவன் என்ற ஒன்று உண்டு எனில் அதோடு சாதிகளும் சமயங்களும் ஒட்டிக்கொண்டது.. 

இறைவனே இல்லை என்கிறேன் இணையுங்கள் அனைவரும் ஒன்றென இறைவனை மறுத்தும் நின்றவர்...!! 

கருவேல முட்கள் போல பரவி கிடந்த எண்ணற்ற தீயவற்றை அழித்து பெறும் பெருமையை சேர்த்துக் கொண்டதால் இயற்பெயர் "ஈ .வே .ரா ."   பெரிய மாற்றம் கண்டதே பெரியாராய்... 

சாமானியராய் பிறந்து சாதனையாளராய்  இறப்பினை அடைந்து...!! 

நெசவாளர்களின் மகனாய் பிறந்து மக்களின் அனைத்து நெஞ்சங்களிலும் நிறைந்து நின்றவர்... 

ஒவ்வொன்றிற்கும் உரிமை உண்டு என் மொழி "என் உரிமை" என்றார்...!! 

தன் சிந்தனைகள் யாவும் ஊரெங்கும் வேண்டும் என்று தன் சிந்தனைகளுக்கு உயிர் கொடுத்தார்... 

நாடகங்களில் வாசகமாய் நூட்களில் எழுத்தாய்...!! 

சினிமாவில் கதாபாத்திரமாய் என அனைத்திலும் சிந்தனையை திணித்தவர்...!! 

அரசியல் அமைப்பை தொடங்கி அரும்பெரும் வெற்றி கண்டு முதலமைச்சர் என்னும் பதவியை பெற்றுக் கொண்டார்...!! 

மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் பெயர் மட்டுமே உண்டு...!! 

என் மாநிலத்திற்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு "தமிழ்நாடு" என்று பெயரிட்டு தமிழ் மொழியை உயரத்திற்கு கொண்டு சென்றவர்... 

இயற்பெயரோ வேறு இதயத்தில் நிறைந்து நின்று பெற்றார் அண்ணா என்ற பேரு... 

சாதிகள் வேண்டாம்! 
 மூட நம்பிக்கைகள் வேண்டாம்! 

மொழிகளால் பிரிய வேண்டாம்! 

வண்ணங்களால் பிரிக்க வேண்டாம்! 

ஒரே இனம் மனித இனம்! 
மனிதமனமே ஏற்றுக்கொள் ! 

இல்லையேல் இனிமேல் திருத்திக்கொள்!...

@⁨🔥பாரதி பாஸ்கி✍⁩ 
@⁨sow karthi⁩

0 Comments