அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

பெயர் 
அன்பு ❤️ மட்டும்
         அருண்

தலைப்பு

அன்பிற்குறிய ஆசிரியர்களுக்கு

தாய் என்னை சோறூட்டி வளர்த்தாள்
இதோ என் ஆசிரியர் தாய்
எனக்கு அறிவு ஊட்டி வளர்க்கிறாள்
ஆற்றல் கொடுத்து வளர்க்கிறாள்

பொது அறிவு தந்து வளர்க்கிறாள்
என்னை பொறுமை படுத்தி வைக்கிறாள்

அவள் இல்லாமல்
எனக்கேது ஆற்றல் அறிவு 
அவள் தானே என் வாழ்க்கையின் உயர்வு

பாசம் காட்ட பஞ்சம் இருக்காது
பாடம் நடத்த வஞ்சகம் இருக்காது
அவள் பாசத்தில் பனிந்தேன்
அவள் பாடத்தில் என் அறிவை உணர்ந்தேன்

தாயின் பெயரை முதலில் கை பிடித்து 
அம்மா என்றெழுத வைத்தவளும் அவள் தானே
எனக்கு பாசம் என்றால் என்னவென்று கற்றுக்கொடுத்தவளும்  அவள் தான்

உன்னிடம் நான் கற்றுக்கொள்ளாத
கல்வியும் இல்லை
தெரிந்து கொள்ளாத வார்த்தைகளும் இல்லை 

தேடி தேடி படிக்க வைத்தாய் 
நான் தேர்ச்சி பெற  
மிரட்டி வைத்தாய்
தோல்வி அடையாமல்
பார்த்து கொண்டாய்
உன் தோல் கொடுத்து என்னை உயர்த்தி சென்றாய்

உன்னை பற்றி நான் என்ன சொல்ல
சொல்ல முடியாத
வார்த்தைகள் 
என்னில் வந்து கொண்டே செல்கிறது
உன்னை மீண்டும் மீண்டும் தேடிக்கொண்டு  செல்கிறது

உன்னை நான் குரு என்று சொல்லவா இல்லை
என் வாழ்கையை மாற்றி அமைத்த கடவுள் என்று சொல்லவா

எனக்கு கடவுளும் நீதான்
என் அறிவை  காத்த குருவும் நீதான்
இன்று அல்ல நாளை அல்ல
என்றும் சொல்வேன் 
என் ஆசிரியர் இல்லையெனில் நான் இல்லையென்று

Arunarun537

@sapna sis
@kamu pullai Sis 

 

0 Comments