பெயர்:- அல்லல்களின் அரிவை அம்மு
தலைப்பு:- நான் யார்?
விந்தணுவில் விதையாய் இருந்தவன்...!
கரு முட்டையோடு கருவாகி என் தாயின் கருப்பையில் உருவானேன்...!
பிறக்கும் போது ஆண் என்று பெயர் வைத்து கொஞ்சி மகிழ்ந்தாள்...!
வளர்ந்தால் வயது அதிகரிக்கும்
வயதால் மாற்றங்கள் அதிகரித்தது என்னுள்ளே ....!
மாற்றங்கள் பல கண்டேன் மாறி நின்றேன் பெண்ணாய்...!
அரும்பும் மீசை மயிர்களை அறுத்து எறிந்து பூசிக்கொண்டேன் மஞ்சளை....!
மாதா மாதம் அறுபடும் தலைமயிரை வளர்த்து கொண்டேன் ஆறடியில்...!
அறுத்தெறியும் நகங்களுக்கு வண்ண நகப்பூச்சு கோலமிட்டேன்...!
வாசம் வீசும் மல்லிகையும் வாசமில்லா கனகாம்பரத்தையும் சூடிக்கொண்டேன் தலையில்...!
ஆடவனின் உடை மாறி அலங்காரம் செய்து கொண்டேன் ஆர்பறிக்கும் புடவையில்...!
பெற்றவர்கள் துரத்தி அடித்ததால் பெயரை மாற்றி கொண்டேன்...!
ஊரார் உபாசன படுத்தியதால் ஊரையும் மாற்றிக்கொண்டேன்...!
ஒவ்வொருவருக்கும் ஒரு பெயருண்டு எனக்கு மட்டும் ஏன் ஒன்பது பெயர்(கள்) ....!
ஆணை "திரு " என்றும் பெண்ணை "திருமதி" என்றும் அழைக்கிறாய்...!
ஆணும் பெண்ணும் கலந்த எனக்கு அவதூறு பெயரும் கொடுக்கிறாய்?...
ஆணும் பெண்ணும் சமம் இங்கே ஆணிலும் பெண்ணிலும் சமமாய் இருக்கும் எனக்கு சமுதாயத்தில் இடம் எங்கே?
உழைக்க உடம்பு இருக்கு மனதில் தெம்பு இருக்கு
மனிதாபிமானம் இல்லா மானிடதல் மானம் இழக்க வேண்டி இருக்கு....!
கை தட்டி காசு கேட்க எனக்கு கூச்சமா இருக்கு....
கூச்சத்த பாத்தா எல்லாம் போச்சுன்னு என் வயிறு சொல்லுச்சு எனக்கு...!
தேசத்தை கெடுக்கும் தேவதாசிகளுக்கும் "விலைமாது" என்று பெயர் சூட்டுகிறாய் மானம் காட்கும் என்னை மடையன் என்கிறாய்...
நங்கை அவளை கற்பழித்தாய்
கற்பு என்பது காற்றோடு போக கலைந்து கொண்டது பெண் எனும் வேடம் ....
சிவன் பாதி சக்தி பாதி இருந்த கடவுளை அர்த்தநாரீஸ்வரர் என்ற மனமே.....
ஆண் பாதி பெண் பாதி இருக்கும் என்னையே "அரவாணி" என்று ஒதுக்கி வைக்கிறாய்...
அர்த்தநாரீஸ்வரராய் அல்ல சக மனிதராக ஏற்றுக்கொள்ள மனம் இல்லையோ அப்படி என்றால் நான் யார்?....
@Kamu pillai Sis @Sowbarnika Pratibha
0 Comments