என் பார்வையில் எதிர்கால இந்தியா

பெயர்: இளம் கவி வெ கவியானந்தம் BCA

மூன்றாம் இடம்

தலைப்பு : என் பார்வையில் எதிர் கால                                     இந்தியா

இமையம் இல்லா நிலையும் 
வருமோ!
இன்னல்கள் சுற்றி இருக்குமோ!

உழவன் இல்லா நிலை வருமோ
உணவு இல்லா நிலையும் வருமோ!

விளைநிலங்கள் இல்லா நிலை
வருமோ!
வீட்டுமனைகள் மட்டும் இருக்கும் நிலை
வருமோ!

தானியம் இல்லா நிலை வருமோ!
தரிசு நிலங்கள் மட்டும் இருக்கும்
நிலை வருமோ!

பயிர் இல்லா நிலை வருமோ!
பசி பஞ்சம் இருக்கும் நிலை வருமோ!

மானிடம் இல்லா நிலை வருமோ!
மயானமான நிலை வருமோ!

காடில்லா நிலை வருமோ!
நாடே இல்லாத நிலை வருமோ!

முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன்
இந்நிலை ஏற்படமல் இருக்க! 

என் போன்றோருக்கு உதவி புரியுங்கள் 
நாட்டை பாதுகாக்கலாம்

உயர்ந்த நாடுகளில் இந்தியாவையும்
சேர்த்துவிடலாம்


@sapna
@kamupillai

0 Comments