பெயர்:
"பிரபஞ்சத்தின் காதலி"
(VS..நற்பவி)
தலைப்பு:
"தெய்வத்திருமகள்"
திருவும் அவனை
திருமதியும் அவளே
வெகுமதியும் அவர்களை
ஆயிரம் முத்துக்களில்
ஒரு முத்தாக பிறப்பெடுத்த தெய்வமகள் அவர்களே ...
ஆணும், பெண்ணும்
ஒன்றாய் இணையும்
ஓங்கார சக்தி கொண்டவர்களே
நெஞ்சில் துணிவுடன்
வலம்வரும் வீர திருமகளே...
ஏன் தயக்கம் கொள்கிறாய்
எழுந்து வா...
போற்றுபவர்கள் போற்றட்டும்
தூற்றுபவர்கள் தூற்றட்டும்
நாம் ஏன் தயக்கம்
கொள்ள வேண்டும்...
என்னில் பாதி தான்
நீ என்று உரைக்க சொல்...
துணிந்திரு, தனித்திரு
உன் பிறப்பில் குறை கூற இங்கு யாரும் தகுதியானவர்கள் அல்ல
இது மாய வலைகளால்
மயக்கம் கொண்ட பூமி
நேரத்துக்கு நேரம் குரங்கு போல் தாவிக் கொண்டுதான் இருக்கும்...
இதிலிருந்து மீண்டு வா...
உனக்கு நீயே நிகர் என்று
எழுந்து வா...
ஆணின் வீரமும்
பெண்ணின் கருணையும்
ஒன்றுபோல் உன்னில்
ஊற்றாய் பாய்கிறது
எத்திசை திரும்பினாலும்
நீ தனித்துவம் மிக்கவள்...
உன்னை குறை கூறும்
கயவர்கள் உன்னைக் கண்டு அஞ்சிட நீ எழுந்து வா...
ஓடாதே ...!ஒதுங்காதே...!
நிமிர்ந்து நில்
நீ தமிழ் திருமகள்
உன்னிடம் குறை காண இங்கு யாரும் யோக்கியர்கள் அல்ல...
உன் செயல்களால்
சரித்திரம் படைத்தாய்
உன் சிந்தனையால்
உலகை வென்றாய்
இனி உன் வருகையால்
உலகை மாற்றி அமைத்திடு....
இது கயவர்கள் ஆளும் பூமி
உன்னால் மட்டுமே மாற்ற இயலும்
ஏனென்றால் நீ தேவமகள்....
திரு திருமதி என்கிற திருமகள்...
உலகம் உன் கையில்
முடிந்தால் வென்றிடு......
@Barathi Pratibha
0 Comments