அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

பங்கேற்பாளர்


எந்தன் மொழி அறிந்து உந்தன் உந்தன் செந்தமிழ் மொழியை செல்லமாய் கற்றுக் கொடுத்தவரே.!!

எம்மை  நல்வழிப்படுத்திட துடிக்கின்ற உன்னதமான உறவே.!!

உண்மையை உரக்க சொல்லிட கற்பித்த உயிரின் உதிரமானவரே.!!

உலகினில் அடுத்த தலைமுறையை பொன் முத்துக்களாய்   வளர்த்தெடுத்து வளர்ந்து கொண்டே தேய்ந்திடும் தேய்பிறையே.!!

நம்பிக்கை துளிர்களை துவண்டுவிடாமலே வகுப்பறையின் நான்கு மூலைகளிலும் எதிர்ரொலித்திடுமே.!!

நம்பிக்கை கொண்டு தன்னம்பிக்கையை தட்டி எழுப்புகின்ற தளராத மனம் கொண்டவரே.!!

புத்தகத்தை மட்டும் புரட்டாமல் புத்துலகையும் அறிந்திட செய்தவரே.!!

புரிந்திடாத புதிர்களையும் புரிந்திட வரையிலும் போராடிடும் குணம் படைத்தவரே.!!

மொழியின் அழகை வாயழகிலே வரிகளாய் விவரித்தவரே.!!

மொழியின் அடையாளத்தை எமக்கு தெளிவுப்படுத்தியவரே.!!

வார்த்தைகளின் உச்சரிப்பில் எங்களை உச்சு கொட்ட வைத்தவரே.!!

வார்த்தைகளில் எங்களுக்கு இன்பசுவை தந்தவரே.!!

ஏணியாய் மாறியே எங்களை ஏற்றிவிட துடிக்கின்ற தூயவரே.!!

ஏற்றம் கொண்டே வாழ்ந்திட வாழ்வின் வழியை கற்று தந்தவரே.!!

நீவிரோ.!! என்றென்றுமே எந்தன் அன்பிற்குரியவரே.!!

            கு.ரமேஷ்குமார்

படவரி : rameshyogi_10

@⁨Sapna Sis⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments