தெய்வ திருமகள்(ன்)

பெயர் : கவி பிரியை பிரியங்கா
தலைப்பு : 'திரு'வும், 'திருமதி'யும்

அவள் அவனானதும் அவன் அவளானதும் அவர்களின் தவறும் சிறிதும் இல்லையே..!

பிறகு ஏன் இந்த சமூகம் மட்டும் இழிவான பார்வை கொண்டு பார்க்கிறது..?

அவர்கள் படைப்பில் குற்றமா..? அல்லது படைத்தவன் மீது குற்றமா..? காரணம் எதுவாயினும் அதற்கு ஒரே பதில் இவர்களை படைத்த இறைவன் ஒருவனே..!

கழிவறை முதல் கல்லறை வரை ஏன் இந்த வேறுபாடு..!

வேற்றுமையிலும் ஒற்றுமை காணவேண்டும் என்பது இயற்க்கை சீற்றத்திலும், சமூக மாற்றத்தில் அல்ல..
சக மனிதர்களிடம் தான் இருக்க வேண்டும்..!

நம் உயிரை (ஆத்மா) காக்கும் ஒரு சிறிய பெட்டி தான் நம் உடல்..!

இந்த அழியும் உடலின் மாற்றத்திற்காக எவ்வளவு இழிவான வார்த்தைகள்..!

இந்த சமூகத்தில் உன் குறையைக் பலரும் கூறுவார்கள்.. ஆனால், உன் குணம் தான் நீ யார் என்று கூறும்..!

நான் ஒரு திருநங்கை என்று யாருக்கும் அஞ்சவும் கூடாது..
யாரிடமும் கெஞ்வும் கூடாது..!

பிறப்பில் அடையாளம் காணாதவரும் தான் பிறந்து அடையாளம் காண்கிறார்கள்..
பிறருக்கும் தன்னை அடையாளமும் படுத்துகிறார்கள்..!

அதில் சிலர்தான் இவர்கள்...
*பிரித்திகா யாஷினி- முதல் காவல் துறை ஆய்வாளர்.
*கல்கி சுப்பிரமணியம்- சமூக எழுத்தாளர், கவிஞர்
*அக்கை பத்மசாலி - முதல் மருத்துவர் *நஸ்ரியா - முதல் காவலர் (IPS)
*அருணா -சமூக ஆய்வாளர்
*மனாபி பந்தோபாத்யாய் - இந்தியாவில் ஒரு கல்லூரி முதல்வர்
*சத்யஸ்ரீ சர்மிளா - முதல் வழக்கறிஞர்
*நிடாஷா பில்வார் - இந்தியவில் அழகி போட்டியில் முதல் பட்டம் பெற்றவர்..!

 சோதனைகள் பல தாண்டி சாதனைகள் படைக்கும், படைத்த இவர்களை போன்றவர்களை வாழ்த்தவில்லை என்றாலும் உங்களது கடும் சொற்களால் வருந்தாதீர்கள்..!

 நீயும் சாதனை பல படைக்க, வெற்றி மாலை சூட
உன் நம்பிக்கை மட்டும் உன் வசம் இருந்தால் நீ மங்கையாக இருந்தால் என்ன..? திருநங்கையாக இருந்தால் என்ன..?

உன் ஊரை உன்னைப் போற்றிப் புகழும் இந்த உலகமே உன்னை போற்றிப் பாராட்டும்..! 

@⁨Barathi Pratibha⁩

0 Comments