பெயர் : ரூபாஸ்ரீ
தலைப்பு :மூன்றாம் பாலினம் இதயம் 🫀
🫀ஆண்பால் பெண்பால் மத்தியில் அன்பின் பாலாக திருநங்கையாக நாங்கள் !!!
🫀மூன்றாம் பாலினமாக நாங்கள் இருந்தாலும் இதயம் ஒன்று தானே !!!
🫀XX குரோமோசோம்களால்
பிறப்பது ஆண்!
XY குரோமோசோம்களால்
பிறப்பது பெண் !!!
🫀X,Y
குரோமோசோம்களின்
குளறுபடியால்
எங்களுக்குப் பெயர்
திருநங்கைகள் !!!
🫀கடவுளின் படைப்பில்
பிழை என்றால் ஏற்பீர்களா அது போல்தான் நாங்களும் !!!
🫀இயற்கையின் படைப்பில்
முரண்பாடுகள்
நாங்கள் !!!
🫀திருநங்கையாக பிறந்தது எங்கள் தவறல்ல !!!
🫀எங்களை
பார்பவர்கள் உங்களை போல தான் எங்களுக்கு
உணர்விருக்கும் என்பதை ஏன்
(மறுக்கிறீர்கள் )
மறக்கிறீர்கள் !!!
🫀ஐந்தறிவு கொண்ட உயிரினத்திடம்
காட்டும் அன்பு கூட
எங்களுக்கு தர
கூச்சம் காட்டுகிறார்கள் !!!
🫀எங்களை போன்றவர்கள் பலரும் பல துறையில்
சிலரும் வழியின்றி
இங்கே தனிசிறையில் !!!
🫀இனியேனும் உங்களில் ஒருவராய் பார்க்கவிடினும் பரவாயில்லை !!!
🫀பள்ளிகளிளும்
பேருந்திலும் கழிப்பறையிலும்
இடம் தாறா விட்டாலும்
பரவாயில்லை !!!
🫀அவசரசிகிச்சை பிரிவில் முதலுதவி
பெற்று உயிர் காத்துக்கொள்ள
அனுமதி அளியுங்கள் !!!
🫀அவனா? அவளா? அதுவா? என்று பார்க்காமல் உணர்வுள்ள மூன்றாம் பாலினமாக பாருங்கள் !!!
@பாரதி பாஸ்கி
@kamu pillai
0 Comments