தெய்வ திருமகள்(ன்)

தலைப்பு: எனக்கும் உணர்வுகள் இருக்கு.

பெயர்: யாதுமானவள் மீரா.

அரவாணி என்று
அருவெறு பெயர்
ஒன்பதுகள் என்று
ஒசந்த பெயர்
இதை கேட்கயில்
கசக்கிறது உயிர்...


மரபணு மாறுபாடு
உடலிலோ வேறுபாடு
என் இனத்தை இழிவு
படுத்தி கூறுபாடு..

பெண்ணவள் இப்பொழுது ஆணாய் உடுத்தி சமம் என போராடுகிறாளே,
ஆண் நானோ பெண்ணாய் சம உரிமை கேக்கவில்லையே!

அள்ளிமுடிந்த கூந்தல்லில் ஆசைக்கு பூ வச்சேன்,
நெத்தி நிறைய பொட்டு வச்சு நிறைஞ்ச மனசோட புன்னகைச்சேன்!

என்ன ஏளனமா தள்ளிவச்ச,  கூத்தாண்டவன் அவன்
பிள்ளையினு சொல்லி வச்சான், முந்தானை போட்டு நான் கூப்பிட்டா குறையெல்லாம் தீர்த்துவைப்பான்!

நெறைஞ்ச மனசோட ஒத்த ரூபா நான் கொடுத்தா உன் வீட்டுல அன்னத்துக்கு பஞ்சமில்லையா!

கல்லுக்கு சேலை கட்டிவட்சா குறுகுறுனு பாப்ப...
நான் ஒத்தையில நின்னா..
விலை என்னனு கேட்ப..!

பெண்ணா இருந்தா அம்மாவா இருந்திருப்பேன்,
ஆணா இருந்தா அப்பாவா இருந்திருப்பேன் 
இப்போ அம்மையப்பனா இருக்கேன் ஆனா அன்பு காட்ட யாருமில்லையே!

Yathumaanaval_meera.

@⁨Kamu pillai Sis⁩ 
@⁨Barathi Pratibha⁩

0 Comments